எப்பொழுதும்
எதற்காகவாவது
கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவர்களைக்
கண்டால் ஆத்திரமாக
இருக்கிறது
உயிரில்லாமல் கிடக்கும்
அவர்களின்
கண்களைக் காண
சகிக்கவில்லை
சிரிக்க மறுக்கும்
அவர்களின் உதடுகளைச்
சுட்டெரிக்க வேண்டும் போலிருக்கிறது
சொந்தக் கவலைகளில்
சுகம் தேடும்
அவர்களின் உள்ளங்களைச்
சூழ்ந்திருக்கும் ஒட்டுண்ணிகளை
விரட்டியோட வைக்க வேண்டும்
கவலைப்பட தயாராகக் காத்து கிடக்கும்
அவர்களின் மனங்களைக்
ஆழ்கடலில் தூக்கியெறிய வேண்டும்
நிகழைச் சூன்யமாக்கிக் கொள்ளும்
அவர்களின் மௌனத்தை
வேரோடு பிடிங்கியெறிய வேண்டும் போலிருக்கிறது...
கார்த்திக் பிரகாசம்...
எதற்காகவாவது
கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவர்களைக்
கண்டால் ஆத்திரமாக
இருக்கிறது
உயிரில்லாமல் கிடக்கும்
அவர்களின்
கண்களைக் காண
சகிக்கவில்லை
சிரிக்க மறுக்கும்
அவர்களின் உதடுகளைச்
சுட்டெரிக்க வேண்டும் போலிருக்கிறது
சொந்தக் கவலைகளில்
சுகம் தேடும்
அவர்களின் உள்ளங்களைச்
சூழ்ந்திருக்கும் ஒட்டுண்ணிகளை
விரட்டியோட வைக்க வேண்டும்
கவலைப்பட தயாராகக் காத்து கிடக்கும்
அவர்களின் மனங்களைக்
ஆழ்கடலில் தூக்கியெறிய வேண்டும்
நிகழைச் சூன்யமாக்கிக் கொள்ளும்
அவர்களின் மௌனத்தை
வேரோடு பிடிங்கியெறிய வேண்டும் போலிருக்கிறது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment