பொது பிரச்சினைக்காக
அனைவரின் நலனுக்காக
ஒன்றுகூடி போராடிய மக்களை
அதிகார துஷ்பிரயோகத்தினால்
அடக்கியொடுக்கி
மனிதாபிமானமில்லாமல்
பத்து பேரைச்
சுட்டுக் கொன்றிருக்கிறது
அரசும் அதனதிகாரமும்...!
நாங்கள் வைத்தது தான் சட்டம்
நாங்கள் கொண்டுவரும் திட்டங்களை
நல்லதோ கெட்டதோ
நீங்கள்
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்
அதன் பாதகங்களைக் குறித்து
யாரும் வாய் திறக்கக் கூடாது
மீறி
அரசுக்கெதிராக
அதிகாரத்திற்கெதிராக
கேள்வியெழுப்பினால்
போராட்டம் நடத்தினால்
அடக்கப்படுவீர்கள்
அப்படியும் அடங்கவில்லையென்றால்
சுட்டுக் கொல்லப்படுவீர்களென்று
பகீரங்கமாக எச்சரிக்கிறார்கள்...!
போராடியவனைக் கொன்றுவிட்டு
அவன் குடும்பத்திற்கு
பணஉதவியென்று அறிக்கையும்
விடுகிறார்கள்...!
ஆட்சி அதிகாரத்தை ருசிக்க
வரிசையில் காத்திருப்பவர்கள்
பாதிக்கப்பட்டவர்களின்
அழுகைக் குரலை
தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு
பயன்படுத்திக் கொள்ள
முந்தியடிக்கிறார்கள்...!
டிவி சேனல்கள்
ஆக்கப்பூர்வமாகச் செயல்படாமல்
பாதிக்கப்பட்டவர்களின்
இறந்தவர்களின் இரத்தம் தோய்ந்த
முகங்களைத் திரும்பத் திரும்பக்
காட்டுகின்றனர்...!
கையாலாகாத ஆத்திரத்தையும்
குற்ற உணர்ச்சியையும்
இஸ்திரி போட்ட சட்டை பேண்ட்டுக்குள்
மறைத்துக் கொண்டு
அலுவலகத்தில் கணிணியை
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நான்...!
கார்த்திக் பிரகாசம்...
அனைவரின் நலனுக்காக
ஒன்றுகூடி போராடிய மக்களை
அதிகார துஷ்பிரயோகத்தினால்
அடக்கியொடுக்கி
மனிதாபிமானமில்லாமல்
பத்து பேரைச்
சுட்டுக் கொன்றிருக்கிறது
அரசும் அதனதிகாரமும்...!
நாங்கள் வைத்தது தான் சட்டம்
நாங்கள் கொண்டுவரும் திட்டங்களை
நல்லதோ கெட்டதோ
நீங்கள்
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்
அதன் பாதகங்களைக் குறித்து
யாரும் வாய் திறக்கக் கூடாது
மீறி
அரசுக்கெதிராக
அதிகாரத்திற்கெதிராக
கேள்வியெழுப்பினால்
போராட்டம் நடத்தினால்
அடக்கப்படுவீர்கள்
அப்படியும் அடங்கவில்லையென்றால்
சுட்டுக் கொல்லப்படுவீர்களென்று
பகீரங்கமாக எச்சரிக்கிறார்கள்...!
போராடியவனைக் கொன்றுவிட்டு
அவன் குடும்பத்திற்கு
பணஉதவியென்று அறிக்கையும்
விடுகிறார்கள்...!
ஆட்சி அதிகாரத்தை ருசிக்க
வரிசையில் காத்திருப்பவர்கள்
பாதிக்கப்பட்டவர்களின்
அழுகைக் குரலை
தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு
பயன்படுத்திக் கொள்ள
முந்தியடிக்கிறார்கள்...!
டிவி சேனல்கள்
ஆக்கப்பூர்வமாகச் செயல்படாமல்
பாதிக்கப்பட்டவர்களின்
இறந்தவர்களின் இரத்தம் தோய்ந்த
முகங்களைத் திரும்பத் திரும்பக்
காட்டுகின்றனர்...!
கையாலாகாத ஆத்திரத்தையும்
குற்ற உணர்ச்சியையும்
இஸ்திரி போட்ட சட்டை பேண்ட்டுக்குள்
மறைத்துக் கொண்டு
அலுவலகத்தில் கணிணியை
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நான்...!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment