Skip to main content

Posts

Showing posts from July, 2025

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_28

"உலகம் யாருக்கு?" சிறுகதையில், “எல்லாரும் அப்படித்தானே இருக்கிறார்கள்! உலகம் தனக்காகத்தான் இருக்கிறது என்று எவன்தான் நினைக்கவில்லை?”

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_27

"17ம் நம்பர் வீட்டு நாய்" சிறுகதையில், தன்னுடைய சுதந்திர வாழ்க்கையை நினைக்க நினைக்க அதற்குப் பேரானந்தமாக இருந்தது. குரைக்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்வதற்காகத் தெருவெல்லாம் குரைத்துக் கொண்டே ஓடிவந்தது. தெருவோடு வந்த பையன் ஒருவன் நாய் குரைப்பதைப் பார்த்து பயந்து விட்டான். தன்னைக் கடிக்கத்தான் வருகிறது என்று நினைத்து ஒரு கல்லை எடுத்து நாயின்மேல் எறிந்தான். எறிந்த கல் நாயின்மேல் விழுவதற்கு முன்பாகவே கம்பியை நீட்டிவிட்டான். ஒரு கால் ஒடிந்து போய்விட்டது. சுற்றும்முற்றும் பையனைக் காணாததால், பலமாகக் குரைத்துக்கொண்டே 17ஆம் நம்பர் வீட்டுக்குள் நுழைந்தது நாய்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_26

"ஓட்டப் பந்தயம்" என்ற சிறுகதையில், அவன் நட்புக்கு எதைச் செய்தாலும் போதுமா? மேல்நாட்டில், பெலிக்கன் என்ற ஒரு பறவை தன் மார்பைக் குத்திக் குத்தி அதி்லிருந்த ரத்தத்தை எடுத்து குஞ்சுகளுக்கு உணவாக ஊட்டுமாம். அதுகூடப் பெரிய காரியமில்லை. நோய்வாய்ப்பட்ட என் ‘ஹூமாயூ’னுக்கு இந்த ‘பாபர்’ தன் எதிர்கால வாழ்வின் வெற்றி, ஆனந்தம் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தேன்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_25

“தவப்பயன்” என்ற சிறுகதையில், இன்னும் ‘நான்’ நசியவில்லை. ‘அவன்’ இன்னும் அவனாகத்தான் இருக்கிறான். ‘அவன்’, ‘நான்’ ஆகவில்லை. ‘நான்’, ‘அவன்’ ஆகவில்லை. கேவலம் தூலசரீரத்தைக் களைந்துவிட்டால் ஈஸ்வர ஐக்கியம் கிட்டிவிடுமா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_24

“திரபுரம்” என்ற சிறுகதையில்… பஞ்சம் வந்துவிட்டது. பஞ்சம் வந்துவிட்டால் என்ன? மக்கள் பட்டினி கிடப்பதோடு மட்டுமில்லாமல் மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது, ஓர் பஞ்சப் பிரதேசத்தைவிட்டு அதைவிடக் கொடுமையான மற்றொரு பஞ்சப் பிரதேசத்திற்குக் குடிபெயர்ந்து செல்லுவார்கள். தென்கோடியில் ஏதோ குபேரபட்டணம் இருப்பதாக அவர்களுடைய நினைப்பு. பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று. கணவன் பட்டினியினால் செத்தான். ஆனால் காலராவில் செத்தான் என்று மானத்துக்கு அஞ்சி பொய் சொன்னாள்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_23

“சிரிக்கவில்லை” என்ற சிறுகதையில்… சோம்பேறித்தனம் அவனுக்கு ஒரு சுகபோகம். அதிலும் இப்போது ரயில்வேயில் வேலையான்ன பிறகு, ஒருவாரம் ராத்திரி வேலையும்,ஒருவாரம் பகல் வேலையுமாகப் போய்விட்டதனால், ராத்திரி வேலை நாட்களில் பகலெல்லாம் உறங்குவான். பகல்வேலை நாட்களிலோ இரவில் உறங்குவதோடு நின்றுவிடுவது கிடையாது. பகலிலும் தூக்கம் வரும். எப்படிப்பட்ட காரியத்துக்குச சந்தர்ப்பம் கிடைத்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தைத் தூங்குவதற்குத்தான் பயன்படுத்துவான். பகலிலும் இரவிலும் கண்கள் சொருகிப்போய் ஒரு மயக்க நிலையிலேயே இருக்கும். அப்படி இருப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கும். சிலர் எப்படி இருந்தபோதிலும்கூட கவர்ச்சி மட்டும் அவர்களை விட்டுப் போகாமலே இருந்துவிடுகிறது அல்லவா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_22

“காடாறு மாதம்” என்ற கதையில், ஒரு சிந்தனைக்கும் அதை அடுத்துக் காரணமின்றி பிறக்கும் மற்றொரு சிந்தனைக்கும் உள்ள ஒற்றுமை, கறுப்புக்கும் வெள்ளைக்கும் உ‌ள்ள ஒற்றுமைதான். அந்த இரண்டு சிந்தனைகளில் முக்கியத்துவம் நிறைந்த சிந்தனைகள் இரண்டு. ஒன்று: ஒரு தடவையாவது பிராந்தி குடித்துப் பார்ப்போமா? இரண்டு: யாராவது ஒரு மலையாளப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?

சிலுவைராஜ் சரித்திரம்

எழுதியவர்: ராஜ் கௌதமன் வகைமை: நாவல் [தன்வரலாறு] வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்’. தலித் சமூகத்தில் பிறந்து வளர்ந்த சிலுவை என்ற தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை மைய களமாகக் கொண்டு தொடங்குகிறது. அதனூடாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து இரண்டு முதல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் நடுப்பகுதி வரையிலான காலக்கட்டத்தில் பின்பற்றி வந்த பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை, அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை, சாதிய ஒடுக்குமுறைகளைச் சாமான்யனின் குரலில் தீர்க்கமாகப் பதிவுச் செய்கின்றது இந்நாவல். என்னுடைய வாசிப்பனுபவத்தில் இந்தளவிற்குக் கிண்டலும், கேலியும் புரையோடிக் கிடக்கும் தன்வரலாற்று நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. ஒவ்வொரு பத்தியிலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் ஒரு வரி கண்டிப்பாகச் சிரிக்க வைத்துவிடும். அதற்குக் காரணம் ராஜ் கௌதமனின் எளிமையானதும், வசீகரமானதுமான எழுத்து நடையும், கதை கூறல் உத்தியுமே ஆகும். அவருடைய நிஜ இயல்புமே அவ்வாறாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாவலின் போக்கில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தங்களுக்கா...

சிலுவைராஜ் சரித்திரம் | ராஜ் கௌதமன்

தமிழில் இலக்கியத் திறனாய்வு செய்வதற்குமுன், இலக்கிய ஆசிரியனின் சாதி, மதம், பாத்துப் பண்ணவேண்டும் என்ற அரிச்சுவடியைக் கத்துகிறாததால வந்த வினை! சாதி, மதம், இனம் முதலான அக்கப்போர்களை விட்டுவிட்டு, விமர்சனமானது இலக்கியத்தகுதி, தரத்தையே முக்கியமாகக் கொள்ள வேண்டும் என்றும், அது அறிவியலுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்றும் இரண்டுவிதமான விமர்சனப் போக்குகள் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தன. இலக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தரம், தரம் இன்மை பார்ப்பது கலை கலைக்காக என்றும், இலக்கியம் உருவான வரலாற்றுச் சந்தர்ப்பங்களையும், இதன் சமூகப் பயன்பாட்டையும் பார்ப்பது கலை மக்களுக்காக என்றும் விளக்கம் சொன்னார்கள். கலை கலைக்காக என்ற பிரிவுக்கு முதலாளித்துவ அரசியலையும், கலை மக்களுக்காக என்ற பிரிவுக்கு சோசலிச அரசியலையும், சோசலிச எதார்த்த வாதத்தையும் ஆதாரமாகக் கருதினார்கள். இவற்றைச் சுருக்கமாக பிற்போக்கு, முற்போக்கு என்று அழைத்தார்கள். இதிலே யார் முற்போக்கு பிற்போக்கு என்பதில் சண்டை வராமலா இருக்கும்? சிலுவைக்கு ரெண்டும் ஓரளவுக்குத் தெரியும். இருந்தாலும் கலை மக்களுக்காக என்கிற அணிதான் தன்னைப் போன்ற சாமான்...

சிலுவை சரித்திரம் | மீச்சிறு இருள்

"ஒய் டு கீப் மம்" ன்னு இங்கிலிஷ்ல கேட்டார். இந்த மாதிரி சங்கடமான சந்தர்பங்கள்ல தாய்மொழியைவிட அந்நிய மொழியில் பேசுறது சம்மந்தப்பட்டவங்களுக்கு ஆசுவாசமாத்தாம் இருக்கும். சிலுவை சரித்திரம் | ராஜ் கௌதமன் "பெருங் கோவத்திலும், ஆற்றாமையிலும் உழலும் போது ஆங்கிலத்தில் கொட்டித் தீர்த்துவிடுவேன். எதிரே நிற்கும் பிரியமானவரைக் கண்டிப்பாகக் காயப்படுத்தும் என முன்னமே உணர்ந்திட்ட வார்த்தைகளை அந்நிய மொழியில் பேசிவிடுவது காயமாக்கும் மனசிற்குச் சற்று ஆறுதலாக இருக்கும் போல" மீச்சிறு இருள் | கார்த்திக் பிரகாசம் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்ட இவ்விரு பத்திகளுக்கும் இடையே உள்ள உணர்வியல் ஒற்றுமை வியப்பில் ஆழ்த்துகிறது.

சிலுவைராஜ் சரித்திரம் | ராஜ் கௌதமன்

மனுசங்க, சாதாரணமாகப் பாத்துப் பேசிக்கிட்டுப் போறாவங்களாக மட்டுமில்ல, அதுக்கு மேலேயும் ஒவ்வொருத்தனும் அந்தரங்கமான ஆழ அகலங்களையும், மறைவிடங்களையும், இருட்டு மூலை முடுக்குகளையும் கொண்டிருக்கிறான் என்பதைச் சிலுவை படிச்ச ஆங்கில இலக்கியங்கள் அவனுக்கு உணர்த்தின. நம்மளப் பத்தி நமக்குள்ள அபிப்ராயந்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது.

சிலுவைராஜ் சரித்திரம் | ராஜ் கௌதமன்

பறக்குடிக்குக் கிழக்கே அவர்களுக்கான இடுகாட்டில் இனிமேல் பொணம் பொதைக்கக் கூடாது என்று நெசவு நெய்கிற சாலியர்கள் தடை செய்தார்களாம். ஊரே அவர்கள் பக்கம் வரிஞ்சு கட்டி நிண்ணதாம். ஊரை எதிர்த்துப் பறக்குடிக்காரர்களால் ஒண்ணும் செய்ய முடியலியாம். வேற கதியில்லாம, சீல்தூர் பங்கிலிருந்த வெள்ளக்காரச் சாமியார்கிட்ட மொறையிட்டங்களாம். அப்போ பிரிட்டிஷ்காரங்க சர்கார் நடத்துனாங்க. அந்தச் சாமியார் ஒரே ஒரு கண்டிசன் போட்டாராம். பறக்குடியச் சேந்தவங்க எல்லாரும் வேதத்துக்கு மாறுனா, அந்த இடுகாட்டையும், மூணு சேரித் தெருவையும் அவர்களுக்கே பட்டா போட்டுக் குடுப்பதாகச் சொன்னாராம். இவங்களும் ஆகட்டும்னு சம்மதிச்சாங்களாம். அதிலேர்ந்து அந்த இடுகாடு கல்லறைத் தோட்டமாகவும், பறக்குடித் தெரு, ஆர்.சி தெருவாகவும் மாறிப்போச்சாம். அப்புறம் ஸ்கூல், தாயார் மடம் எல்லாம் வந்ததாகச் சொல்வாங்க. எல்லாம் வெள்ளக்காரச் சாமியார்கள் செஞ்சாங்களாம்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_22

“காடாறு மாதம்” என்ற கதையில், ஒரு சிந்தனைக்கும் அதை அடுத்துக் காரணமின்றி பிறக்கும் மற்றொரு சிந்தனைக்கும் உள்ள ஒற்றுமை, கறுப்புக்கும் வெள்ளைக்கும் உ‌ள்ள ஒற்றுமைதான். அந்த இரண்டு சிந்தனைகளில் முக்கியத்துவம் நிறைந்த சிந்தனைகள் இரண்டு. ஒன்று: ஒரு தடவையாவது பிராந்தி குடித்துப் பார்ப்போமா? இரண்டு: யாராவது ஒரு மலையாளப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_21

"ரச விகாரம்" என்ற சிறுகதையில், “கதவைத் திறடா, அயோக்கியப் பயலே” என்று ஒரு தடவை உரத்துக் கூவியதோடு நிறுத்திக் கொண்டார். ஒழுக்கக் குறைவைவிட ஒழுக்கக்குறைவின் பகிரங்கமே மனிதனுக்கு எமன் என்ற ரகசியம் பட்டென்னு நெஞ்சில் பட்டது.