பறக்குடிக்குக் கிழக்கே அவர்களுக்கான இடுகாட்டில் இனிமேல் பொணம் பொதைக்கக் கூடாது என்று நெசவு நெய்கிற சாலியர்கள் தடை செய்தார்களாம். ஊரே அவர்கள் பக்கம் வரிஞ்சு கட்டி நிண்ணதாம். ஊரை எதிர்த்துப் பறக்குடிக்காரர்களால் ஒண்ணும் செய்ய முடியலியாம். வேற கதியில்லாம, சீல்தூர் பங்கிலிருந்த வெள்ளக்காரச் சாமியார்கிட்ட மொறையிட்டங்களாம். அப்போ பிரிட்டிஷ்காரங்க சர்கார் நடத்துனாங்க. அந்தச் சாமியார் ஒரே ஒரு கண்டிசன் போட்டாராம். பறக்குடியச் சேந்தவங்க எல்லாரும் வேதத்துக்கு மாறுனா, அந்த இடுகாட்டையும், மூணு சேரித் தெருவையும் அவர்களுக்கே பட்டா போட்டுக் குடுப்பதாகச் சொன்னாராம். இவங்களும் ஆகட்டும்னு சம்மதிச்சாங்களாம். அதிலேர்ந்து அந்த இடுகாடு கல்லறைத் தோட்டமாகவும், பறக்குடித் தெரு, ஆர்.சி தெருவாகவும் மாறிப்போச்சாம். அப்புறம் ஸ்கூல், தாயார் மடம் எல்லாம் வந்ததாகச் சொல்வாங்க. எல்லாம் வெள்ளக்காரச் சாமியார்கள் செஞ்சாங்களாம்.
அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு., முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்... நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும் நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும் பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை... நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது... என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்... நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...
Comments
Post a Comment