தமிழில் இலக்கியத் திறனாய்வு செய்வதற்குமுன், இலக்கிய ஆசிரியனின் சாதி, மதம், பாத்துப் பண்ணவேண்டும் என்ற அரிச்சுவடியைக் கத்துகிறாததால வந்த வினை! சாதி, மதம், இனம் முதலான அக்கப்போர்களை விட்டுவிட்டு, விமர்சனமானது இலக்கியத்தகுதி, தரத்தையே முக்கியமாகக் கொள்ள வேண்டும் என்றும், அது அறிவியலுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்றும் இரண்டுவிதமான விமர்சனப் போக்குகள் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தன.
இலக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தரம், தரம் இன்மை பார்ப்பது கலை கலைக்காக என்றும், இலக்கியம் உருவான வரலாற்றுச் சந்தர்ப்பங்களையும், இதன் சமூகப் பயன்பாட்டையும் பார்ப்பது கலை மக்களுக்காக என்றும் விளக்கம் சொன்னார்கள்.
கலை கலைக்காக என்ற பிரிவுக்கு முதலாளித்துவ அரசியலையும், கலை மக்களுக்காக என்ற பிரிவுக்கு சோசலிச அரசியலையும், சோசலிச எதார்த்த வாதத்தையும் ஆதாரமாகக் கருதினார்கள். இவற்றைச் சுருக்கமாக பிற்போக்கு, முற்போக்கு என்று அழைத்தார்கள். இதிலே யார் முற்போக்கு பிற்போக்கு என்பதில் சண்டை வராமலா இருக்கும்? சிலுவைக்கு ரெண்டும் ஓரளவுக்குத் தெரியும். இருந்தாலும் கலை மக்களுக்காக என்கிற அணிதான் தன்னைப் போன்ற சாமான்யா்களுக்குப் பொருத்தமானது என்று நினைத்தான்.
Comments
Post a Comment