"ஒய் டு கீப் மம்" ன்னு இங்கிலிஷ்ல கேட்டார். இந்த மாதிரி சங்கடமான சந்தர்பங்கள்ல தாய்மொழியைவிட அந்நிய மொழியில் பேசுறது சம்மந்தப்பட்டவங்களுக்கு ஆசுவாசமாத்தாம் இருக்கும்.
சிலுவை சரித்திரம் | ராஜ் கௌதமன்
"பெருங் கோவத்திலும், ஆற்றாமையிலும் உழலும் போது ஆங்கிலத்தில் கொட்டித் தீர்த்துவிடுவேன். எதிரே நிற்கும் பிரியமானவரைக் கண்டிப்பாகக் காயப்படுத்தும் என முன்னமே உணர்ந்திட்ட வார்த்தைகளை அந்நிய மொழியில் பேசிவிடுவது காயமாக்கும் மனசிற்குச் சற்று ஆறுதலாக இருக்கும் போல"
மீச்சிறு இருள் | கார்த்திக் பிரகாசம்
வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்ட இவ்விரு பத்திகளுக்கும் இடையே உள்ள உணர்வியல் ஒற்றுமை வியப்பில் ஆழ்த்துகிறது.
Comments
Post a Comment