“சிரிக்கவில்லை” என்ற சிறுகதையில்…
சோம்பேறித்தனம் அவனுக்கு ஒரு சுகபோகம். அதிலும் இப்போது ரயில்வேயில் வேலையான்ன பிறகு, ஒருவாரம் ராத்திரி வேலையும்,ஒருவாரம் பகல் வேலையுமாகப் போய்விட்டதனால், ராத்திரி வேலை நாட்களில் பகலெல்லாம் உறங்குவான். பகல்வேலை நாட்களிலோ இரவில் உறங்குவதோடு நின்றுவிடுவது கிடையாது. பகலிலும் தூக்கம் வரும். எப்படிப்பட்ட காரியத்துக்குச சந்தர்ப்பம் கிடைத்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தைத் தூங்குவதற்குத்தான் பயன்படுத்துவான். பகலிலும் இரவிலும் கண்கள் சொருகிப்போய் ஒரு மயக்க நிலையிலேயே இருக்கும். அப்படி இருப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கும். சிலர் எப்படி இருந்தபோதிலும்கூட கவர்ச்சி மட்டும் அவர்களை விட்டுப் போகாமலே இருந்துவிடுகிறது அல்லவா?
Comments
Post a Comment