Skip to main content

Posts

Showing posts from November, 2014
கண்கள் கலக்கும் போது கருவாகும் காதல் காமத்தைக் கடக்கும் போது உயிர் பெறுகிறது.. பலருக்கு காதல் கருவிலேயே சிதைந்து விடுகிறது.. சிலருக்கு மட்டும் காதல் உயிராகி உறவாகிறது.. கார்த்திக் பிரகாசம்...
மகன்: ஏன்ம்மா இப்போ உப்புமா செஞ்ச.. அம்மா: எப்போ பாத்தாலும் தோசை,இட்லியே செய்யறன்னு நீ சொல்லவும் தான கண்ணு உப்புமா செஞ்சேன். மகன்: அதுக்கு ஏன் உப்புமா செஞ்ச.. எனக்கு பிடிக்காதுனு தெரியாதா. அம்மா: தெரியும் கண்ணு. இன்னைக்கு மட்டும் சாப்புடு. நாளைக்கு நான் வேற செய்றேன். மகன்: போ. எனக்கு ஒன்னும் வேணாம்.. நான் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்.. அம்மா: இரு கண்ணு. ஹோட்டல் போகாத. நான் பெரிம்மா வீட்டுக்குப் போய் மாவு வாங்கிட்டு வந்து தோசை ஊத்தி தரேன்.. மகன்: ம்ம்ம்.... சில வருடங்களுக்குப் பின்...   மகன்: மச்சி.. காசு இல்ல டா. நைட் சாப்புடறதுக்கு என்ன பண்றது.. நண்பன்: 10 ரூபா இருக்கா.. மகன்: இருக்கு டா. அதான் கடைசி. ஏன்..? நண்பன்: பேசாம ரவை வாங்கி ரெண்டு பேரும் உப்புமா செஞ்சு சாப்பிட்டுக்லாம்.. மகன்: (வெறுமையான சிரிப்புடன்) அண்ணா.. ரவை ஒரு பாக்கெட் கொடுங்க... ரவையைக் கிண்டினான் உப்புமா ஆனது. கிண்டின உப்புமா அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்தது... கார்த்திக் பிரகாசம்...
ஆண்டாண்டு காலம் ஆண்டு அனுபவித்து விட்டு அனைத்தையும் அள்ளிச் சென்றான்.. ஆங்கிலத்தை மட்டும் அன்பளிப்பாக விட்டுச் சென்றான் .. இன்று அவன் மொழியை பிழையின்றி பேசினால் தான் வேலை என்கிறார்கள்.. பிழைக்க வந்தவன் இன்னும்  நம் பிழைப்பை பிணைக் கைதியாக வைத்திருக்கிறான்... கார்த்திக் பிரகாசம்...
ஒருவனின் அறிவாளித்தனம் அனைவரையும் சோம்பேறிகள் ஆக்கி விடுகிறது... கார்த்திக் பிரகாசம்...
வாய்ப் பேச்சு வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது "வாட்ஸ் அப்பின்" வருகையினால்.. முகப்பேச்சு முடங்கிக் கொண்டிருக்கிறது "முகப்புத்தகத்தின்" மோகத்தால்.. ஆட்டோ ஓட்டுனரிடம் அட்ரஸ் கேட்டு செல்லும் பழக்கம் பழசாகி விட்டது "கூகிள் மாப்பின்" ஆதிக்கத்தால்.. கார்த்திக் பிரகாசம்...    

தூக்கம்...

கடவுள் கொடுத்த கருணை கொடை.. வருகிறேன் வருகிறேன் என்று பாசாங்கு கட்டாமல் கூப்பிட்ட மேனிக்கு கண்ணுக்குள் வந்து ஊஞ்சலாடும் உறவு.. நாம் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் வருகிறதா இல்லை அது வருவதால் தான் நாம் அதை நினைத்துக் கொள்கிறோமா என்று குழப்பமடைய வைக்கும் "கண் குழந்தை".. அடிக்கடி இன்னொரு உலகத்திற்குக் கூட்டிச் சென்று ஆச்சரியங்களை அள்ளித் தந்து கற்பனை உலகத்தின் கடவுச் சொல்லைக் கடத்தி கண்ணுக்குள் காட்டும் "மெய் நண்பன்".. பணம் இல்லாதவனிடம் கூட தேடிப் போய் நலம் விசாரிக்கும் "ஒரே விருந்தாளி".. கார்த்திக் பிரகாசம்...

கழிப்பறை

  மகராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண். பெயர் சங்கிதா.. இவர் திருமணமாகி வந்த நாள் முதலே கணவர் வீட்டில் கழிப்பறையே இல்லை. அவசரம் என்றால் பக்கத்தில் இருக்கும் முள்ளுக் காட்டிற்குத் தான் செல்ல வேண்டும்..    திருமணமாகி இத்தனை வருடமாய் சகித்துக் கொண்டிருந்த சங்கிதா சில தினங்களுக்கு முன் தனது மகள் பெரிய மனுசி ஆனவுடன் தனது தாலியைக் கழட்டி விற்று தன் வீட்டில் கழிப்பறையைக் கட்டி முடித்திருக்கிறார்.. இது ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டும் இல்லை. அந்த கிராமத்தின் பிரச்சினை. இது போல பல கிராமங்கள் நம் நாட்டில் இருக்கின்றன.        "கோயில்களை விட கழிப்பறைகள் தான் முக்கியம்" என்ற விளம்பர வாசங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசை மட்டும் நம்பி பிந்நாளில் குறைக் கூறாமல் சமுக அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் மற்றும் நடிகர்களின் நற்பணி மன்றங்களும் மக்களுக்கு கழிப்பறை கட்டும் முயற்சி மேற்கொண்டால் வெகு நாட்களாக இந்த அடிப்படை வசதிக் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்... கார்த்திக் பிரகாசம்...
மனிதனின் மனம் ஒரு நல்ல பொதுநலவாதி... தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முற்படும் போது கூட இதனால் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தான் முதலில் யோசிக்கிறது.. கார்த்திக் பிரகாசம்...
மதத்தில் இல்லை ""மனிதம்""... மனசாட்சியில் இருக்கிறது.. மனிதம் வளர்ப்போம்.. கார்த்திக் பிரகாசம்...
உரிமை இல்லாதவளின் உறவுக்காக உறக்கம் கெட்டுத் தொலைகிறேன்... கார்த்திக் பிரகாசம்...
    கடந்த ஞாயிறு, வாழ்வில் மறக்க முடியாத நாளாக நின்று விட்டது. ஆட்டோகிராப் படத்தில் "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடலுக்கு புல்லாங்குழல் வாசித்த திரு.பெருமாள் அவர்களை நண்பர் (கார்த்திக் பாஸ்கர்) மூலமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.     மிகவும் பணிவான அனைவரிடமும் கனிவாக பேசும் மிக அற்புதமான மனிதர். தன்னம்பிக்கையின் மொத்த உருவம்.. செய்யும் தொழிலை அந்த கடவுளை விட ஒரு படி மேல் வைத்துப் பார்க்கிறார். அவருக்கு அசாத்தியமான விஷயமான விஷயங்களையும் எளிதாக சாத்தியமாக்கிக் கொள்கிறார். அவர் மீது அனு தாபம் வரவில்லை ஏனென்றால் அவரால் பார்க்க இயலாது என்பது அவர் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால் மாறாக அவர் மீது வியப்பு ஏற்பட்டது. பார்வை இல்லை என்ற குறையையேக் குறைப்பட வைத்துக் கொண்டிருக்கிறார்.    கண் முன்னே இருப்பவர்களையெல்லாம் காரணமே இல்லாமல் வெறுத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், தான் இதுவரை கண்டிராத இனியும் காண முடியாத தன் தாய் மீதும் தன்னையே நம்பி வந்த மனைவி மற்றும் மகன் மீதும் அளவில்லா அன்பையும் பாசத்தையும் கொண்டிருக்கிறார்.. கார்த்திக...

அவள்..

அறிமுகமில்லா அழகி அவள்.. ஆபரணம் அணியா ஓவியம் அவள்...!! பரிச்சயம் இல்லா பால் நிலவு அவள்...!! கண்டப் பொழுதில் மெய்க் குளிர வைக்கும் சூரியன் அவள்...!! தொட்ட கணத்தில் சுட்டெரிக்கும் நெருப்பு அவள்...!! கண்களில் கதைப் பேசும் சிற்பம் அவள்..!! வளையல் கொலுசு சிணுங்கள்களில் மனதை மயக்கும் இசைஞானி அவள்..!! கோபத்தின் போது கொதிக்கும் கடல் அவள்..!! அன்பைக் காட்டும் போது பொழியும் மழை அவள்...!! என் மனதை அவளுக்கு அடிமைப் படுத்திய ராணி அவள்...!! பாசத்தால் என்னை ஆளும் இன்னொரு அன்னை அவள்...!! கார்த்திக் பிரகாசம்...