கடவுள் கொடுத்த
கருணை கொடை..
வருகிறேன் வருகிறேன் என்று
பாசாங்கு கட்டாமல்
கூப்பிட்ட மேனிக்கு
கண்ணுக்குள் வந்து
ஊஞ்சலாடும் உறவு..
நாம் அதையே நினைத்துக்
கொண்டிருப்பதால்
வருகிறதா இல்லை
அது வருவதால் தான்
நாம் அதை
நினைத்துக் கொள்கிறோமா
என்று குழப்பமடைய வைக்கும்
"கண் குழந்தை"..
அடிக்கடி இன்னொரு
உலகத்திற்குக் கூட்டிச் சென்று
ஆச்சரியங்களை அள்ளித் தந்து
கற்பனை உலகத்தின்
கடவுச் சொல்லைக் கடத்தி
கண்ணுக்குள் காட்டும்
"மெய் நண்பன்"..
பணம் இல்லாதவனிடம் கூட
தேடிப் போய்
நலம் விசாரிக்கும்
"ஒரே விருந்தாளி"..
கார்த்திக் பிரகாசம்...
கருணை கொடை..
வருகிறேன் வருகிறேன் என்று
பாசாங்கு கட்டாமல்
கூப்பிட்ட மேனிக்கு
கண்ணுக்குள் வந்து
ஊஞ்சலாடும் உறவு..
நாம் அதையே நினைத்துக்
கொண்டிருப்பதால்
வருகிறதா இல்லை
அது வருவதால் தான்
நாம் அதை
நினைத்துக் கொள்கிறோமா
என்று குழப்பமடைய வைக்கும்
"கண் குழந்தை"..
அடிக்கடி இன்னொரு
உலகத்திற்குக் கூட்டிச் சென்று
ஆச்சரியங்களை அள்ளித் தந்து
கற்பனை உலகத்தின்
கடவுச் சொல்லைக் கடத்தி
கண்ணுக்குள் காட்டும்
"மெய் நண்பன்"..
பணம் இல்லாதவனிடம் கூட
தேடிப் போய்
நலம் விசாரிக்கும்
"ஒரே விருந்தாளி"..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment