மகன்: ஏன்ம்மா இப்போ உப்புமா செஞ்ச..
அம்மா: எப்போ பாத்தாலும் தோசை,இட்லியே செய்யறன்னு நீ சொல்லவும் தான கண்ணு உப்புமா செஞ்சேன்.
மகன்: அதுக்கு ஏன் உப்புமா செஞ்ச.. எனக்கு பிடிக்காதுனு தெரியாதா.

அம்மா: தெரியும் கண்ணு. இன்னைக்கு மட்டும் சாப்புடு. நாளைக்கு நான் வேற செய்றேன்.
மகன்: போ. எனக்கு ஒன்னும் வேணாம்.. நான் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்..
அம்மா: இரு கண்ணு. ஹோட்டல் போகாத. நான் பெரிம்மா வீட்டுக்குப் போய் மாவு வாங்கிட்டு வந்து தோசை ஊத்தி தரேன்..
மகன்: ம்ம்ம்....
சில வருடங்களுக்குப் பின்...
மகன்: மச்சி.. காசு இல்ல டா. நைட் சாப்புடறதுக்கு என்ன பண்றது..
நண்பன்: 10 ரூபா இருக்கா..
மகன்: இருக்கு டா. அதான் கடைசி. ஏன்..?
நண்பன்: பேசாம ரவை வாங்கி ரெண்டு பேரும் உப்புமா செஞ்சு சாப்பிட்டுக்லாம்..
மகன்: (வெறுமையான சிரிப்புடன்) அண்ணா.. ரவை ஒரு பாக்கெட் கொடுங்க...
ரவையைக் கிண்டினான் உப்புமா ஆனது. கிண்டின உப்புமா அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்தது...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment