கடந்த ஞாயிறு, வாழ்வில் மறக்க முடியாத நாளாக நின்று விட்டது.
ஆட்டோகிராப் படத்தில் "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடலுக்கு புல்லாங்குழல்
வாசித்த திரு.பெருமாள் அவர்களை நண்பர் (கார்த்திக் பாஸ்கர்) மூலமாக
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மிகவும் பணிவான அனைவரிடமும் கனிவாக பேசும் மிக அற்புதமான மனிதர். தன்னம்பிக்கையின் மொத்த உருவம்.. செய்யும் தொழிலை அந்த கடவுளை விட ஒரு படி மேல் வைத்துப் பார்க்கிறார். அவருக்கு அசாத்தியமான விஷயமான விஷயங்களையும் எளிதாக சாத்தியமாக்கிக் கொள்கிறார். அவர் மீது அனுதாபம் வரவில்லை ஏனென்றால் அவரால் பார்க்க இயலாது என்பது அவர் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால் மாறாக அவர் மீது வியப்பு ஏற்பட்டது. பார்வை இல்லை என்ற குறையையேக் குறைப்பட வைத்துக் கொண்டிருக்கிறார்.

Comments
Post a Comment