Skip to main content

Posts

Showing posts from September, 2015
எமனாக வந்த பட்டம்... "பட்டம்" விட செய்யப்படும் "மாஞ்சா நூல்"கழுத்தை அறுத்து சென்னை பெரம்பூரில் 5வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்... பட்டதைப் பறக்கச் செய்யுங்கள் உயிரைப் பறிக்கச் செய்யாதீர்கள்... கார்த்திக் பிரகாசம்... 
ஒரு முனையில் தண்ணீருக்குள் தள்ளாடுபவர்களின்  வாழ்க்கை.. மற்றெல்லா முனைகளிலும் தண்ணீரில் தள்ளாடுபவர்களின்  வாழ்க்கை.. தமிழகம் ஒரு தண்ணீர் தேசம்.. கார்த்திக் பிரகாசம்...

சைக்கிளைத் தேடும் சாலை...!!!

தார்த் தோள்களில் உன்னை சுமந்து இந்த கல் தேசமும் தாய்மை வரம் பெற்றது... வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக வேண்டாம் மொட்டிலிருந்து விடுபட்ட பூவாக பிறந்து வா.. மீண்டு வா... மீண்டும் வா... உன் தேய்ந்த ரப்பர் பாதங்கள் இந்த கல் தேசத்தில் மீண்டும் கால் பதிக்க நிறம் கறுத்து மனம் வெறுத்து உன்னைத் தேடி அலைகிறேன்... கார்த்திக் பிரகாசம்...
பார்வை மங்கிய தெருவிளக்கொன்று வெகுநாட்களாக பகலில் தொலைத்ததை இரவில் மட்டும் தேடிக் கொண்டிருக்கிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
இறந்து போன இலைகளுக்கு இறுதி அஞ்சலி இழைப்பதால் காற்றின் கண்களில் ஈரப்பதம்... கார்த்திக் பிரகாசம்...
மூச்சுத் திணறலுக்கு    மாத்திரை போட்டு விட்டு  பலூன் பலூன் என்று கூவினான்...!!! அவன் மூச்சுக் காற்றில்  உயிர் கொண்ட பலூன்கள்  சைக்கிளில் ஒய்யாரமாக  சிரித்துக் கொண்டிருந்தன...!!! கார்த்திக் பிரகாசம்...
கடவுளுக்கு பயப்படாதவன் கூட கண்காணிப்பு கேமராவிற்கு பயப்படும் காலம்....!!! கார்த்திக் பிரகாசம்...
பேராசை - மனிதனை   முடியும்வரை முடுக்கிவிடும் முடியாவிட்டால்  முடித்துவிடும்...!!! பேராசை இழப்பின் தொடக்கப்புள்ளி...!!! கார்த்திக் பிரகாசம்...
பயணிகள் கவனத்திற்கு... பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது முடிந்தவரை தேவையான அளவு சில்லறை காசு வைத்து கொண்டு ஏறுங்கள்.. 5 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாயை நீட்டினால், பாவம் அந்த நடத்துனர் மட்டும் என்ன செய்வார்.. பெரும்பாலும் இன்று, சில்லறை இல்லாமல் பேருந்தில் ஏறிவிட்டு நடத்துனரிடம் சண்டைக்கு நிற்கும் பயணிகளின் காட்சி வெகு சாதாரணமாகிவிட்டது.. நாம் கொடுத்தால் தானே அவரின் பையில் சில்லறை இருக்கும்.. சில நடத்துனர்கள் சில்லறை இல்லை என்று கடுமையாக நடத்தினாலும் நாம் கோபம் அடைய தேவையில்லை.. ஏனென்றால் தொடர் பணியின் அலைச்சலினால், விரக்தியினால் அவர்கள் அப்படி பேசுகிறார்கள்.. நம்மை பொறுத்தவரையில் அந்த ஒரு பேருந்து; அந்த ஒரு நடத்துனர்... அவ்வளவு தான்.. ஆனால் அவர்களுக்கு தினமும் ஆயிரமாயிரம் பயணிகள் மற்றும் ஆயிரமாயிரம் கடுஞ்சொற்கள்... சில்லரையால் ஏற்படும் சில்லறைத்தனமான பிரச்சனைகளைத் தவிர்ப்போம்.. கார்த்திக் பிரகாசம்...
எனை ஏறி மிதித்தாலும் நீ தடுமாறும் போது உனை தாங்கி பிடிப்பேன்...!! இப்படிக்கு உன் காலணி... கார்த்திக் பிரகாசம்...
     புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "அக்னி பரிட்சை" என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு.சீமான் அவர்களின் பதில்களும், கேள்விகளும் மனதுக்குள் ஆழமான தாக்கத்தையும், கேட்பாரில்லாமல் கிடந்த கேள்விகளையும் மனதுக்குள் கேட்டுவிட்டன... **கல்வியும், மருத்துவமும் தானே மக்களின் மிக முக்கியமான தேவைகள். பிறகு ஏன் அரசாங்கம் ஆடு மாடு மிக்சி கிரைண்டர் என்று பொருள்களை இலவசமாக தருகின்றது ஆனால் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக தரவில்லை...?? **மத உணர்வும், சாதி உணர்வும் நம் மொழி உணர்வை, தமிழன் என்ற இன உணர்வை மறக்கடிக்க வைத்துவிட்டனவா...?? **மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தண்ணீரையே காசு கொடுத்து வாங்கி குடிக்கும் அளவிற்கு நம் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா...?? **வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு.. மிக பெருமையான விடயம் தான்.. ஆனால் வந்தவர்கள் வசதியாக வாழ்கின்றனர்; வாழ வைத்தவர்கள் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே.. வந்தவர்களையெல்லாம் வாழ வைத்தது நம் குற்றமல்ல ஆனால் வந்தவர்களையெல்லாம் ஆள வைத்தது நம் குற்றமோ...?? **ஒருவன...
"இல்லை"கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

உலக தற்கொலை தடுப்பு தினம்...

புத்திசாலித்தனத்தின் போர்வையைப் போற்றிக் கொண்டு புறமுதுகைக் காட்டி போதனை செய்யும் முட்டாள் தனம் தற்கொலை...!!! பிரச்சனைகள் நிரந்தமானதுமில்லை...!!! தற்கொலை அதற்கு தீர்வுமில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
ஏமாற்றத்தினால்  ஏற்பட்ட மாற்றம் நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்... கார்த்திக் பிரகாசம்... 

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...
உலகத்திற்கு அறிமுகமாகும் குழந்தைகளுக்கு உலகத்தை அறிமுகபடுத்தும் மூத்த முகம்.. பலமுகம் கண்ணெதிரே இருந்தாலும் பாரபட்சம் காட்டா கலை முகம்... விண்மீன்களாய் மின்னிக்  கொண்டிருக்கும் ஒவ்வொரு மாணாக்கர்களை யும் முழு நிலவாய் மாற்ற  தங்களை இரவாய் இருட்டிக் கொள்ளும் இனிய முகம்.. எங்களை எங்களுக்கே அறிமுகப்படுத்தி எங்கள் திறமைகளை  உலகிற்கு அடையாளப்படுத்தி   சமுதாயத்தின் ஆணிவேராய்  அமைந்திருக்கும் ஆசிரியர்களுக்கு  நன்றி நிறைந்த   வாழ்த்துக்கள்.. . கார்த்திக் பிரகாசம்...
விரும்பிச் செய்தால் விலகிச் செல்வது கூட விருது கொடுத்து வியக்க வைக்கும்...!!! கார்த்திக் பிரகாசம்...
      நம் நாட்டில் " பிச்சை கேட்பது " பிரதானமான தொழிலாகிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகமும் பயமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது... மக்கள் அதிகம் கூடும் இடங்களான, திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களின் வாசல்களிலும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் சிலர், பொது மக்களிடம் பணம் கேட்பதும், ஒரு வேளை தர மறுத்து விட்டால் அவர்கள் பின்னாடியே சென்று கெஞ்சுவதுமாக எண்ணிக்கையில் சிலராக இருந்த இவர்கள் இன்று பலராக பலவிதமாக பெருகிக் கொண்டு வருகின்றனர்... பணத்தைத் தவிர மற்ற உதவிகள் செய்ய முன்வந்தாலும் அவர்களில் பெரும்பாலனோர் ஏற்றுக் கொள்வதில்லை.. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக காணப்படுகிறது.. சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் மனதளவில் மிகவும் பாதிப்பதாக இருந்தது.. வார விடுமுறை நாளில் நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தேன். ஒரு வணிக வளாகத்தில் இருந்து வெளியே வரும் போது, 5 முதல் 8 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி என்னுருகில் வந்து கையை நீட்டினாள். நான் அந்த சிறுமியிடம் என்ன படிக்கிறாய்.. உன் பெற்றோர்கள் மற்றும் வீடு எங்கே என்ற...