Skip to main content
      நம் நாட்டில் "பிச்சை கேட்பது" பிரதானமான தொழிலாகிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகமும் பயமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...
மக்கள் அதிகம் கூடும் இடங்களான, திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களின் வாசல்களிலும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் சிலர், பொது மக்களிடம் பணம் கேட்பதும், ஒரு வேளை தர மறுத்து விட்டால் அவர்கள் பின்னாடியே சென்று கெஞ்சுவதுமாக எண்ணிக்கையில் சிலராக இருந்த இவர்கள் இன்று பலராக பலவிதமாக பெருகிக் கொண்டு வருகின்றனர்... பணத்தைத் தவிர மற்ற உதவிகள் செய்ய முன்வந்தாலும் அவர்களில் பெரும்பாலனோர் ஏற்றுக் கொள்வதில்லை.. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக காணப்படுகிறது.. சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் மனதளவில் மிகவும் பாதிப்பதாக இருந்தது.. வார விடுமுறை நாளில் நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தேன். ஒரு வணிக வளாகத்தில் இருந்து வெளியே வரும் போது, 5 முதல் 8 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி என்னுருகில் வந்து கையை நீட்டினாள். நான் அந்த சிறுமியிடம் என்ன படிக்கிறாய்.. உன் பெற்றோர்கள் மற்றும் வீடு எங்கே என்று கேட்டேன்.. அந்த சிறுமி அதை பொருட்படுத்தவே இல்லை. தொடர்ந்து அந்த சிறுமி, "அண்ணா... என்று கையை நீட்டினாள். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல் அப்பொழுது தான் பணம் தருவேன் என்று கூறினேன். பிறகு அந்த சிறுமி, அவள் வீடு வேளச்சேரியில் இருப்பதாக சொன்னாள். உன் அப்பா அம்மா என்ன செய்கிறார்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் வேறொரு சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினாள். நீ பள்ளிக்குப் போகவில்லையா..??? என்று கேட்டதற்கு, பள்ளிக்குச் செல்வதாகவும் விடுமுறை நாட்களில் இங்கு வந்து பிச்சை எடுப்பதாகவும் கூறினாள்.. மேலும் அந்த சிறுமி சொன்னதைக் கேட்டு மனம் அதிர்ந்து விட்டது..

அவளும், அவளுடைய தம்பியும் விடுமுறை நாட்களில் அங்கு வந்து பிச்சை எடுப்பதாகவும், அதிகமான பணத்தைக் கொண்டு செல்லாவிட்டால் அவளுடைய அம்மாவும் அப்பாவும் திட்டுவார்கள் என்றும் அழுதுக் கொண்டே கூறினாள். அவளுடைய பெற்றோரை நினைக்கும் போது மனதில் கோபம் பொங்கி எழுந்தது. இது போன்ற பல பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்லும் அப்பாவி குழந்தைகளைத் தங்களின் சுகத்திற்க்காகவும், சுயநலத்திற்காகவும் பிச்சை எடுக்க வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சில நடுத்தரப் பெண்கள், கை குழந்தையுடன் நின்று, குழந்தைக்கு பாலூட்ட வேண்டும் சோருட்ட வேண்டும் என்று மற்றவர்களின் மனிதாபிமானத்தை தங்களின் சுயநலத்திற்காக சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்.
"பிச்சை எடுப்பது" குற்றம் என்று நான் சொல்லவில்லை ஆனால் அது ஒரு கொடுமையான விஷயம். தனக்கு தானே செலுத்திக் கொள்ளும்(கொல்லும்) விஷ ஊசியைப் போன்றது. தன்னை பெற்றவர்களையோ அல்லது தான் பெற்றவர்களையோ, வாழ்க்கையில் ஒருவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளுகிறான் அல்லது தூண்டுகிறான் என்றால் அவனை விட ஒரு பெரும்குற்றவாளி வேறெவனும் இல்லை. என் கோபமும், எரிச்சலும் பிச்சை எடுப்பவர்கள் மீதல்ல. அவர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிய அல்லது தூண்டிய அந்த ஒரு சிலரின் மீது தான். அவனை வாழ்க்கையின் குற்றவாளியாக மேலும் இந்த தேசத்தின் துரோகியாகத் தான் கருதத் தோன்றுகிறது.. "பிச்சை எடுத்தாவது பிழைத்து கொள்ளலாம்" என்ற வார்த்தைகள் கூட எவர் வாயிலிருந்தும் வரக் கூடாது. உயிர் உள்ளவரை, இந்த மண்ணில் நடமாடும் காலம் வரை ஒவ்வொருவரும் உழைத்தே வாழ வேண்டும். அடுத்தவரின் உழைப்பையோ, மனிதாபிமானத்தையோ நம்பி வாழக் கூடாது.. இனி மண்ணில் பிறக்கப் போகும் எந்தவொரு உயிருக்கும் பிச்சை எடுப்பது என்றால் என்னவென்றே தெரியாத நிலை ஏற்பட வேண்டும்.. அதற்கு நாம் பிச்சை எடுப்பவர்களை ஆதரிக்கவோ ஆறுதல் தெரிவிக்கவோ தேவை இல்லை. நாம் ஒரு பிச்சைகாரன் உருவாக காரணமாக இல்லாமல் இருந்தாலே போதும்..
கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...