பயணிகள் கவனத்திற்கு...
பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது முடிந்தவரை தேவையான அளவு சில்லறை காசு வைத்து கொண்டு ஏறுங்கள்.. 5 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாயை நீட்டினால், பாவம் அந்த நடத்துனர் மட்டும் என்ன செய்வார்..
பெரும்பாலும் இன்று, சில்லறை இல்லாமல் பேருந்தில் ஏறிவிட்டு நடத்துனரிடம் சண்டைக்கு நிற்கும் பயணிகளின் காட்சி வெகு சாதாரணமாகிவிட்டது.. நாம் கொடுத்தால் தானே அவரின் பையில் சில்லறை இருக்கும்..
சில நடத்துனர்கள் சில்லறை இல்லை என்று கடுமையாக நடத்தினாலும் நாம் கோபம் அடைய தேவையில்லை.. ஏனென்றால் தொடர் பணியின் அலைச்சலினால், விரக்தியினால் அவர்கள் அப்படி பேசுகிறார்கள்..
நம்மை பொறுத்தவரையில் அந்த ஒரு பேருந்து; அந்த ஒரு நடத்துனர்... அவ்வளவு தான்.. ஆனால் அவர்களுக்கு தினமும் ஆயிரமாயிரம் பயணிகள் மற்றும் ஆயிரமாயிரம் கடுஞ்சொற்கள்...
சில்லரையால் ஏற்படும் சில்லறைத்தனமான பிரச்சனைகளைத் தவிர்ப்போம்..
கார்த்திக் பிரகாசம்...
அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு., முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்... நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும் நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும் பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை... நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது... என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்... நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...
Comments
Post a Comment