ஆறு போல ஓடித் திரிந்தவள் திருமணப் பேச்சுத் தொடங்கியதும் குட்டை போல குழம்பி நிற்கிறாள்...!!! நட்புடன் ஒருவன் மணமாசையுடன் மற்றொருவன்...!!! தீரா யோசனை...!!! மணமானால் புதுவுறவு நட்பை முறித்துவிடுமே என்ற பயம்...!!! மணத்தைத் தள்ளிப் போட்டால் சார்ந்தவர்கள் வருந்துவார்களே என்ற பதற்றம்...!!! எதை முறிப்பது எதை வளர்ப்பது...!!! ஆனால் எப்பாடுபட்டாவது இன்றவள் முடிவெடுத்தே தீர வேண்டும் ஏனென்றால் கடித்துத் துப்ப அவள் விரல்களில் இன்னும் நகங்கள் இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...