மதிய நேரத்தின் மஞ்சள் வெயில் மாநகரத்தை நிறம் மாற்றிக் கொண்டிருந்தது. வெப்பத்தைக் கடிந்தும்; காறி உமிழ்ந்தும்; மற்றவர்கள் உமிழ்ந்ததை மிதித்தும் மந்தையாய் பெருங்கூட்டமொன்று நகர வாழ்க்கையின் பரபரப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. காண்பவர்களின் உடல்களிலெல்லாம் வியர்வைத் தூறல்கள். அக்கடுமையான வெயிலிலும் டீக் கடையில் கூட்டத்திற்குக்கொன்றும் குறைவில்லை. டீயை மட்டுமே குடித்து வாழும் மனித உயிர்கள் ஏராளம் போலும். டீயோடு சேர்த்து உருவத்தில் மட்டுமே வெவ்வேறாக இருந்த போண்டாவும் பஜ்ஜியும் போட்டிப் போட்டுக் கொண்டு காலியாயி கொண்டிருந்தன. போண்டாவையும் பஜ்ஜியையும் அவசர அவசரமாக தூக்கிக் கொண்டிருந்த கைகளின் இடைவெளியில் அவன் தெரிந்தான்.
எலும்புகளை இழுத்து இறுக்கிக் கட்டியிருக்கும் தோல். அவ்விறுக்கத்தில் குத்திட்டு துருத்தி நிற்கும் எழும்புகள். ஒரு எலும்புக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளி மழைக் காலத்து தார்ச் சாலையை போல அங்கங்கு பள்ளமாகவும், சிறுசிறு குழிகளாகவும் இருந்தன. அவன் சட்டைப் போட்டிருக்காததால் அவை தெளிவாகக் கண்ணுக்குப் புலனாயின. இடுப்புக்கு மேல் தொடங்கி பாதிக் காலை கூட மறைக்காமல் தொங்கியது சிராய். செருப்பின்றி வெகு நாட்கள் நடந்திருந்ததால் மரத்துப் போய் அதன் அடையாளமாக கருங்கோதுமை நிறக் கோடுகள் அடிப்பாதத்தை மீறி கணுக்காலை நோக்கி நீண்டிருந்தன. பற்கள் தன் சுயநிறத்தை இழந்து அல்லது மறந்து பல மாதங்கள் ஆகியிருக்கலாம். பயிர் காலத்தில் பொய்த்த மழையினால் வறண்டு போன நிலம் போல் , எண்ணெய் பார்க்காத தலையில் ஆங்காங்கு வெடிப்புகள். அக்குளில் சின்ன மஞ்சப் பை. முகத்தில் சாந்த சொரூபம்.
நேராக டீ மாஸ்டரிடம் போய், "அண்ணே. ஒரு 'டீ'க் கெடைக்குமா.?" என்று பத்து ரூபாய்த் தாளை நீட்டினான்.
'காச அங்க கொடு' என்று கல்லா பெட்டியில் அமர்ந்திருப்பவரைச் சுட்டிக் காட்டினார் மாஸ்டர்.
அவன் கல்லா பெட்டியை நோக்கி சென்றதும், "ரெண்டு வாரமா ஏதாவது வேலக் கெடைக்குமான்னு வந்து கேட்டுட்டு கேட்டுட்டு போறான். பாக்க பாவமே இருக்கேன்னு நானும் ஓனர்கிட்ட கேட்டேன் . 'யாரு எவன்னே தெரியல. அவன் மூஞ்சிய பாத்தாலும் நல்லவனா தோணல. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்னு சொல்லிட்டாரு" என்று அக்கடையின் நிரந்தர வாடிக்கையாளனான முத்துவிடம் 'டீ' மாஸ்டர் சொன்னார்.
முத்து அவனைக் கவனித்தான். முகத்தைப் பார்த்தால் ஏமாற்றுபவனாகவோ, பொய் சொல்கிறவனாகவோ தெரியவில்லை.
காசைக் கொடுத்துவிட்டு எதிரே இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தான். ஆனால் எவரையும் பார்க்கவில்லை. தன் சோகங்களையெல்லாம் தலை நிமிர்த்தாமல் தரையிலே கொட்டிக் கொண்டிருந்தான்.
அவனுடைய கண்களைச் சந்திக்க முற்பட்டான் முத்து. ஆனால் அதற்கு பெரும் பிரயத்தனம் தேவையிருந்தது. டீயை வாங்கும் போது தலையை நிமிர்த்தினான். இதான் சமயமென்று அவன் கண்களைப் பார்த்து புன்னகைத்தான் முத்து.
அவன் உடனே, "அண்ணே வேல ஏதாவது சொல்லுங்கண்ணே.! எந்த வேலைய இருந்தாலும் பரவாலேண்ணே" என்று கெஞ்சலாகக் கேட்டான்.
"உன் பேரு என்ன.? எந்த ஊரு.?" முத்து விசாரித்தான்.
"பேரு பால்துரைண்ணே. ஊரு சங்கரன்கோவில் பக்கத்துல தேவர்குளம்ண்ணே"... 'ஏதாவது வேல இருந்தா சொல்லுங்கண்ணே.'
குரல் கனீரென்றிருந்தது.
சரி..! "சென்னைக்கு எப்போ வந்த.? அடுத்த கேள்வியைக் கேட்டான் முத்து.
அது ஆச்சுண்ணே பாஞ்சி இருவது நாளைக்கு மேல. ஊருல ஸ்நேகிதக்காரனுங்க சொன்னானுங்க, "டேய். பால்துரை..! இங்க இருந்தா ஒன்னும் உருப்புடாது . நீயும் உங்கப்பன் மாதிரியே நேரம் பொழுது பாக்காம குடிச்சிக்கிட்டு சாகவேண்டியது தான்.பேசாம நீ சென்னைக்குப் போ. அங்க போனின்னா ஏதாவது ஒரு வேலக் கெடச்சிடும். கஷ்டப்பட்டு வேல செஞ்சினா அத புடிச்சுக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா மேல வந்தரலாம்".
நானும் முந்நூறு ரூவா பணத்த எடுத்துக்கிட்டு கெளம்பிடேன். டிக்கெட்டுக்கே நூத்தி அம்பது போயிடுச்சு.எக்மோர்ன்னு ஏதோ ஒரு ஊருல வந்து யரங்குனேன். எங்க போறதுன்னு தெரியாம அப்படியே சேத்துப்பட்டு நடந்து போயிட்டேன்.அன்னைக்கு நைட்டு அங்க தான் ஒரு பிளாட்பார்ம்ல படுத்து தூங்குனேன். நடுராத்திரி போலீஸ்காரங்க வந்து தட்டியெழுப்பி இங்கெல்லாம் தூங்கக் கூடாதுனு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போயிட்டாங்க. பேரு, ஊருலாம் எழுதிக்கிட்டு கைரேக வாங்கிட்டுதான் விட்டாங்க. அப்புறம் அப்டியே வேலக் கேட்டு சுத்தி சுத்தி இங்க வந்து சேந்தேன்.. பணமும் காலியாயிருச்சு.. ந்தா..! எதிர்ல இருக்குற அந்த பிளாட்பார்ம்ல தான் தெனமும் தூங்குறேன். இந்த ஏரியால போலீஸ்காரங்க எதும் சொல்றதில்ல" . 'அண்ணே...! வேல ஏதாவது இருந்தா சொல்லுங்கண்ணே... அங்க தான் எப்பவும் இருப்பேன், '
தான் சென்னை வந்த கதையைச் சொல்லி முடித்தான்.
முத்துவிற்கு தான் சென்னைக்கு வந்து வேலைத் தேடி அலைந்த நாட்கள் மனதிற்குள் நிழலாடின.
சரிடா சொல்றேன். ஆனா நீ குடிப்பியா.? என்று முத்துக் கேட்டான்.
"அட ஏண்ணே நீ வேற..! ஏற்கனவே எங்கப்பன் குடிகாரானா இருக்குறனால தான் நான் இங்க இப்டி பிச்சைக்காரனாட்டம் சுத்திகிட்டு இருக்கேன். இந்த நெலமைல நான் எப்படிண்ணே குடிப்பேன்."
அவனின் பதில் முத்துவிற்கு மிகுந்த ஆறுதலாய் இருந்தது. இவனுக்கு எப்பாடுபட்டாவது ஒரு வேல வாங்கித் தந்திட வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
நீ சாப்டியா.? இல்லண்ணே..!
'சாப்புடுறியா.?'
"பரோட்டா வாங்கிக் கொடுண்ணே".
டேய்..! மதிய நேரத்துல பரோட்டா எங்கடா கெடைக்கும்.
பிரியாணி சாப்புடுறியா.? சரிண்ணே..!
ஒரு மட்டன் பிரியாணி பார்சல் வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டு, நான் இந்த டீக்கடைக்கு அடிக்கடி வருவேன். என்ன வந்து பாரு. நானும் இந்தப் பக்கம் வரும்போது உன்னப் பாக்குறேன். நீ ஒழுங்கா இருக்குற மாதிரி தெரிஞ்சிதுனா உனக்கு ஏதாவதொரு வேல வாங்கித் தரேன்"
"சரிண்ணே" என்றுச் சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தான்.
அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு, அவ்வழியாகச் செல்லும் போதெல்லாம் அந்தப் பிளாட்பாரத்தையொட்டிய இடங்களில் நோட்டமிட்டான் முத்து.
பால்துரை அங்கு இருக்கவில்லை.
ஆனால் 'அண்ணே...! வேல ஏதாவது இருந்தா சொல்லுங்கண்ணே.' என்ற குரல் சுவற்றில் படிந்திருந்த கறைகளில் பட்டு உதிர்ந்துக் கொண்டிருந்தது...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment