இருவரும் சந்தித்துக் கொண்டனர்
அவ்விரு பெண்களும்
முந்தைய நாள் வரை
ஒருவரையொருவர் அறிந்ததில்லை
வாழ்க்கையையே புரட்டிவிடும்
மிகக்கொடிய
நிகழ்வொன்று தனக்கு அரங்கேறும்
அச்சூழ்நிலையில் அவ்வாறே பாதிக்கப்பட்ட
மற்றொருவரைச் சந்திப்போமென்று
இருவரிலொருவரும் கனவில்கூட
நினைத்திருக்க மாட்டார்கள்
ஆனால் அவ்விருவரும்
ஒற்றைத் துன்பத்தின் வேதனையில் இன்று
கைக்கோர்த்து நிற்கின்றனர்
இருவருக்கும் சம்மந்தமே இல்லை
வேறு வேறு மாநிலம்
வெவ்வேறு மொழி
இருந்தாலும் இருவருக்கும் சம்மந்தமுண்டு
காதல் கண்டு
கணவனைப் பெற்று
எவருடைய சாதிப் பசிக்கோ
அவனைக் காவுக் கொடுத்தவர்கள்
பெற்றோரின் சுயசாதிக்
கௌரவமென்னும் இழிவினால்
தலைவிதி மாற்றப்பட்டவர்கள்
சிலரின் உணர்ச்சிவசத்தால்
தம் கனவினைத் தொலைத்தவர்கள்
கணவனையும் காதலையும்
கண்முன்னே இழந்தவர்கள்
அதிலொருத்தியின் இறந்தகாலம்
மற்றொருத்தியின் நிகழ்காலத்தின்
முன்பிரதியாய் நின்று
எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நல்குகிறது
அன்பாய் அரவணைக்கிறது
ஆறுதலாய் தோளில் சாய்த்துக் கொள்கிறது
நீண்டதொரு போராட்டத்திற்கான வாளை
காலம் அவர்களின் கைகளில்
திணித்திருக்கின்றது
அதனை அவர்கள்
உணர்ந்தே இருக்கின்றார்கள்
கார்த்திக் பிரகாசம்...
அவ்விரு பெண்களும்
முந்தைய நாள் வரை
ஒருவரையொருவர் அறிந்ததில்லை
வாழ்க்கையையே புரட்டிவிடும்
மிகக்கொடிய
நிகழ்வொன்று தனக்கு அரங்கேறும்
அச்சூழ்நிலையில் அவ்வாறே பாதிக்கப்பட்ட
மற்றொருவரைச் சந்திப்போமென்று
இருவரிலொருவரும் கனவில்கூட
நினைத்திருக்க மாட்டார்கள்
ஆனால் அவ்விருவரும்
ஒற்றைத் துன்பத்தின் வேதனையில் இன்று
கைக்கோர்த்து நிற்கின்றனர்
இருவருக்கும் சம்மந்தமே இல்லை
வேறு வேறு மாநிலம்
வெவ்வேறு மொழி
இருந்தாலும் இருவருக்கும் சம்மந்தமுண்டு
காதல் கண்டு
கணவனைப் பெற்று
எவருடைய சாதிப் பசிக்கோ
அவனைக் காவுக் கொடுத்தவர்கள்
பெற்றோரின் சுயசாதிக்
கௌரவமென்னும் இழிவினால்
தலைவிதி மாற்றப்பட்டவர்கள்
சிலரின் உணர்ச்சிவசத்தால்
தம் கனவினைத் தொலைத்தவர்கள்
கணவனையும் காதலையும்
கண்முன்னே இழந்தவர்கள்
அதிலொருத்தியின் இறந்தகாலம்
மற்றொருத்தியின் நிகழ்காலத்தின்
முன்பிரதியாய் நின்று
எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நல்குகிறது
அன்பாய் அரவணைக்கிறது
ஆறுதலாய் தோளில் சாய்த்துக் கொள்கிறது
நீண்டதொரு போராட்டத்திற்கான வாளை
காலம் அவர்களின் கைகளில்
திணித்திருக்கின்றது
அதனை அவர்கள்
உணர்ந்தே இருக்கின்றார்கள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment