Skip to main content

Posts

Showing posts from November, 2018

மெட்ராஸ் தாத்தா

ஒரே நேரத்தில் குறிவைத்து எய்யப்பட்ட ஆயிரமாயிரம் அம்புகளைப் போல உடலைக் குத்தித் துளைக்கின்றன மழைத்துளிகள். பகலெது இரவெது என்ற தகவல் அறியவிடாமல் பெய்யென பெய்யும் பேய் மழை. உடல் நடுங்குகிறது. "இருந்தாலும் இந்த மழை ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது". மழை தந்த ஈரத்தால் கனமான தலைமுடியை உதறிக் கொண்டே பேருந்தில் ஏறினேன். எப்பொழும் போல ஓட்டுநரின் பக்கவாட்டில் இருக்கும் முன் இருக்கைக்குச் சென்றேன். ஜன்னல் இருக்கை ஆளில்லாமல் தனித்திருந்தது. மழையில் நனைந்திருந்தது. மழைக்கால ஜன்னல் இருக்கையை போல என்றோவொருநாள் நானும் எல்லோராலும் கைவிடப்படுவேனோ.? ஆனால் அது என்னமோ தெரியவில்லை சாலையை மறைக்காத அந்த முன் இருக்கையில் அமரும் போது மனதிற்குள் ராணியைப் போன்ற ஓர் உள்ளுணர்வு. ஜன்னலில் பட்டுத் தெறித்த மழைத்துளிகள் உடலையும் உள்ளாடையையும் நனைக்கையில் உலராத ஈரம் உயிரின் மூலத்தைத் தொட்டுச் செல்கிறது. அணிந்திருந்த கண்ணாடியில் ஒட்டியிருந்த வட்ட மழைத்துளிகளின் வழியே பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்த அந்த வயதான உருவத்தைப் பார்த்தேன்.வளைந்த கைத்தடியைப் போலிருந்தது. குறுகிய உடல்.குளிருக்கு நடுங்கும் கோழிக் ...

மாற்றங்க(ள்)ளே வி(னா)டை

ஏமாற்றமா..??? பிடித்ததெல்லாம் விலகிப் போன பி ன் பிடிக்காததெல்லாம் பழகிப் போகும் பழகிக் கொள்கிறேன். கவலையா..??? அவற்றையெல்லாம் அவ்வப்போது கண்ணீரில் கரைத்துவிடுவேன். நிம்மதியா..??? கண்ணீரின் சாம்பலில் மீட்டெடுப்பேன். மகிழ்ச்சியா..??? மழைக்கால ஜன்னல் இருக்கைக்கு மகிழ்ச்சி எ(ஏ)து. துணையா..??? பிணநாள் வரையில் நானெந்தன் நிழலிலேயே இளைப்பாறுவேன். கார்த்திக் பிரகாசம்...
2000ம் ஆண்டு தமிழகத்தையே பதற்றத்தில் உலுக்கிய சம்பவம், சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் ஆங்காங...
பூப்பெய்தியவளின் தீட்டை புயல் வந்து தீர்த்தது.? கார்த்திக் பிரகாசம்...

நானொரு சாதீய இந்துவாகச் சாகமாட்டேன்.

மீண்டுமொரு ஆணவக் கொலை. பட்டியலின சாதீயைச் சேர்ந்தவரை காதலித்து மணந்துக் கொண்டதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அப்பெண்ணின் அப்பன், பெரியப்பன்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும் மிகவும் கொடுமையான முறையில் கொலைச் செய்து ஆற்றில் வீசியுள்ளனர். சகாரா பாலைவனம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பசுமையாக இருந்ததாம்..! செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் அல்ல, பெரும் ஏரியே கொட்டிக் கிடக்குறதாம்..! மனிதனின் உடலையறுத்து செய்யும் மருத்துவத்திற்கும் மனித இயந்திரங்கள் கண்டுபிடித்தாகிவிட்டதாம்...! இரவில் வெளிச்சத்திற்கான மின்சாரத் தேவையைப் போக்கிட செயற்கை நிலவுச் செய்கிறார்களாம்...! அனைவருக்கும் கழிப்பிடம் சாத்தியப்படும் நோக்கில் நீர் உபயோகிக்காமலேயே,கழிவுகளை ஓரிடத்தில் தேக்காமல் அவற்றை மறுசுழற்சிக்குட்படுத்தி, சுத்தம் செய்யத் தேவைப்படும் நீரை அதன் மூலமே பிரித்தெடுக்கும் - ஏதோ நானோ மெம்பரேன் டெக்னாலாஜியாம்...! இவ்வாறு மேலை நாடுகளெல்லாம் அறிவியலை தங்களுக்குள் கையகப்படுத்தி உலகத்தின் மறுபக்கச் சுவரைத் துளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பைசாக்கு புரோஜனமில்லாத சாதியைத் தூக்கிப் பிடித்த...

எங்கிருந்தோ வந்தோம்

அலுவலகத்தில் நெருக்கமான நண்பர்கள் அமைவார்கள் என்ற நம்புவதெல்லாம், "கஜா" புயல் கண்டிப்பாகச் சென்னைக்கு மழையைத் தரும் என்ற எதிர்பார்ப்பை போலத் தான். இறுதியில் மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சும். இருப்பினும் நகரம் தூங்கிக் கிடக்கையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையைப் போல எப்பொழுதாவது சிலர் அமைவார்கள். ஒருவர் இருவர் அமைந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் கிட்டத்தட்ட இருபத்தைந்து பேருக்கு மேலொரு  அணியே அமைந்தால்.? அதுவும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாகப் பயணித்தால்.! அது எந்தவொரு  இயற்கை நிகழ்வும் அரங்கேறிடாத டிசம்பர் மாத சென்னையைப் போன்றது. பெரும் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் தரக் கூடியது. இரண்டு வருடத்திற்கும் மேலாக பயணித்த திட்டப்பணி, போதுமான அல்லது எதிர்பார்த்த  முழுவடிவத்தை  அடைந்துவிட்டதால் இத்தனை நாள் சுமந்திருந்த சுமையை இன்று ஒரே நாளில் இறக்கி வைத்து தன் சவாரியை முடித்துக் கொண்டது. பயணம் முடிந்துவிட்டது. இனி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணம் என்பது நியதி. எதிர்பார்ப்பும் கூட. ஆனால்  பணத்தையும், அறிவையும் பெருக்க...

மீண்டும் அவள் தொட்டிலுக்கு

'ஓ. இத இப்பிடி மாத்திட்டாங்களா ..!'; 'ஹே.. இந்த எடத்துல தான் தீனிக் கட இருந்துச்சு..?'; 'ச்சார் கூட மாத்தல பாரு'; 'தோ. இங்க கேட் மாதிரி பெருசா கம்பி இருக்கும் தர டிக்கெட் எடுத்தவங்க பெஞ்சு டிக்கெட் பக்கம் போகாம இருக்குறதுக்காக. அப்பவும் நம்மாளுங்க தாண்டி போய்ட்டு தான் இருப்பாங்க. அந்த கேட்டு சும்மா கடனேனு நிக்கும்.!' முன்ன இந்தளவுக்கு சவுண்ட் 'டம்முடம்மு' ன்னு இருக்காது பாத்துக்க.. கக்கூஸ் பக்கம் போகவே முடியாது. இப்போ பரவால்ல. "நாம ஒருதடவ ஆயா வீட்டுக்கு வந்திருந்தப்ப, மாமா ஒன்ன 'பிரியமானவளே' படத்துக்கு கூட்டிட்டு போனாறே. ஞாபகம் இருக்கா.?" அது இந்த தியேட்டர் தான். அப்போ 'ஜோதி தியேட்டர்'ன்னு இருந்துச்சு. இப்ப 'சரஸ்வதி தியேட்டர்'ன்னு மாத்திட்டாங்க. "சொந்த ஊரில் சிறுவயதில் எப்பொழுதோ சென்ற திரையரங்கிற்கு, இருபத்தியேழு வருடங்கள் கழித்து மறுபடியும் சென்றால் எப்படி இருக்கும்.?" படம் முடிந்து வெளியே வரும் வரையிலும் இப்படிதான் சிலாகித்துக் கொண்டு இருந்தாள் அம்மா. கார்த்திக் பிரகாசம்...

புன்னகைச் செய் மனமே

தட்டிக் கொண்டே இரு நிறுத்தாதே. உனது கதவுகள் ஒருநாள் திறக்கும் அன்று அழையா விருந்தாளிகள் - வாசலில் உன்முன் மண்டியிட்டு நிற்பார்கள் உன்னை ஏறி மிதித்தவர்கள் உதறித...