'ஓ. இத இப்பிடி மாத்திட்டாங்களா ..!'; 'ஹே.. இந்த எடத்துல தான் தீனிக் கட இருந்துச்சு..?'; 'ச்சார் கூட மாத்தல பாரு'; 'தோ. இங்க கேட் மாதிரி பெருசா கம்பி இருக்கும் தர டிக்கெட் எடுத்தவங்க பெஞ்சு டிக்கெட் பக்கம் போகாம இருக்குறதுக்காக. அப்பவும் நம்மாளுங்க தாண்டி போய்ட்டு தான் இருப்பாங்க. அந்த கேட்டு சும்மா கடனேனு நிக்கும்.!' முன்ன இந்தளவுக்கு சவுண்ட் 'டம்முடம்மு' ன்னு இருக்காது பாத்துக்க.. கக்கூஸ் பக்கம் போகவே முடியாது. இப்போ பரவால்ல.
"சொந்த ஊரில் சிறுவயதில் எப்பொழுதோ சென்ற திரையரங்கிற்கு, இருபத்தியேழு வருடங்கள் கழித்து மறுபடியும் சென்றால் எப்படி இருக்கும்.?" படம் முடிந்து வெளியே வரும் வரையிலும் இப்படிதான் சிலாகித்துக் கொண்டு இருந்தாள் அம்மா.
கார்த்திக் பிரகாசம்...
"நாம ஒருதடவ ஆயா வீட்டுக்கு வந்திருந்தப்ப, மாமா ஒன்ன 'பிரியமானவளே' படத்துக்கு கூட்டிட்டு போனாறே. ஞாபகம் இருக்கா.?" அது இந்த தியேட்டர் தான். அப்போ 'ஜோதி தியேட்டர்'ன்னு இருந்துச்சு. இப்ப 'சரஸ்வதி தியேட்டர்'ன்னு மாத்திட்டாங்க.
"சொந்த ஊரில் சிறுவயதில் எப்பொழுதோ சென்ற திரையரங்கிற்கு, இருபத்தியேழு வருடங்கள் கழித்து மறுபடியும் சென்றால் எப்படி இருக்கும்.?" படம் முடிந்து வெளியே வரும் வரையிலும் இப்படிதான் சிலாகித்துக் கொண்டு இருந்தாள் அம்மா.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment