அலுவலகத்தில் நெருக்கமான நண்பர்கள் அமைவார்கள் என்ற நம்புவதெல்லாம், "கஜா" புயல் கண்டிப்பாகச் சென்னைக்கு மழையைத் தரும் என்ற எதிர்பார்ப்பை போலத் தான். இறுதியில் மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சும். இருப்பினும் நகரம் தூங்கிக் கிடக்கையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையைப் போல எப்பொழுதாவது சிலர் அமைவார்கள். ஒருவர் இருவர் அமைந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் கிட்டத்தட்ட இருபத்தைந்து பேருக்கு மேலொரு அணியே அமைந்தால்.? அதுவும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாகப் பயணித்தால்.! அது எந்தவொரு இயற்கை நிகழ்வும் அரங்கேறிடாத டிசம்பர் மாத சென்னையைப் போன்றது. பெரும் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் தரக் கூடியது.
இரண்டு வருடத்திற்கும் மேலாக பயணித்த திட்டப்பணி, போதுமான அல்லது எதிர்பார்த்த முழுவடிவத்தை அடைந்துவிட்டதால் இத்தனை நாள் சுமந்திருந்த சுமையை இன்று ஒரே நாளில் இறக்கி வைத்து தன் சவாரியை முடித்துக் கொண்டது. பயணம் முடிந்துவிட்டது. இனி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணம் என்பது நியதி. எதிர்பார்ப்பும் கூட. ஆனால் பணத்தையும், அறிவையும் பெருக்கிக் கொள்ள ஒன்றிணைந்தவர்கள், பிரிவினால் இன்று கண்கள் குளமாவதை மறைத்துக் கொண்டு செல்கிறார்கள்.
வெளியில் சொல்ல முடியாத மனதை அழுந்த புதைக்கும் பாரம். அது அலுவலைத் தாண்டி, அடிமனதின் ஆழத்தில் உண்டாகிவிட்ட நட்பென்னும் பிணைப்பினால்.
யாருக்காகவோ, எதற்காகவோ எங்கிருந்தோ வந்த நாம் இங்கு ஒன்றிணைந்தோம். நாம் அனைவரும் மற்றவர்களின் வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமலும் சில நல்ல மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறோம். இதில் குன்றியோர் யாருமில்லை அனைவரும் விஞ்சியர்வர்களே.
இப்போதைக்கு பிரிவோம். நட்புத் தொடரட்டும். என்றாவது ஒருநாள் சந்திப்போம். அப்பொழுது பேரன்புடன் மீண்டும் இணைவோம்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment