Skip to main content

நானொரு சாதீய இந்துவாகச் சாகமாட்டேன்.

மீண்டுமொரு ஆணவக் கொலை. பட்டியலின சாதீயைச் சேர்ந்தவரை காதலித்து மணந்துக் கொண்டதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அப்பெண்ணின் அப்பன், பெரியப்பன்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும் மிகவும் கொடுமையான முறையில் கொலைச் செய்து ஆற்றில் வீசியுள்ளனர்.

சகாரா பாலைவனம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பசுமையாக இருந்ததாம்..! செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் அல்ல, பெரும் ஏரியே கொட்டிக் கிடக்குறதாம்..! மனிதனின் உடலையறுத்து செய்யும் மருத்துவத்திற்கும் மனித இயந்திரங்கள் கண்டுபிடித்தாகிவிட்டதாம்...! இரவில் வெளிச்சத்திற்கான மின்சாரத் தேவையைப் போக்கிட செயற்கை நிலவுச் செய்கிறார்களாம்...! அனைவருக்கும் கழிப்பிடம் சாத்தியப்படும் நோக்கில் நீர் உபயோகிக்காமலேயே,கழிவுகளை ஓரிடத்தில் தேக்காமல் அவற்றை மறுசுழற்சிக்குட்படுத்தி, சுத்தம் செய்யத் தேவைப்படும் நீரை அதன் மூலமே பிரித்தெடுக்கும் - ஏதோ நானோ மெம்பரேன் டெக்னாலாஜியாம்...! இவ்வாறு மேலை நாடுகளெல்லாம் அறிவியலை தங்களுக்குள் கையகப்படுத்தி உலகத்தின் மறுபக்கச் சுவரைத் துளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பைசாக்கு புரோஜனமில்லாத சாதியைத் தூக்கிப் பிடித்து, பெற்ற பிள்ளைகளையே கழுத்தறுத்து வீசிக் கொண்டிருக்கிறோம்.

கொந்தளிக்கும் உணர்ச்சிகளையெல்லாம் கொஞ்சம் ஓரந்தள்ளிவிட்டு நிதானமாக யோசித்து பாருங்கள். அடுத்தவனைத் தாழ்ந்தனவென்றுச் சொல்லும் முன், முதலில் நாம் யார்.?

ஒருவனுக்கு அடிமையாக அதாவது வைப்பாட்டியின் மகனாக, தாசியின் மகனாகக்(தேவிடியாவின் மகனாக) வைத்திருக்கும் இந்து சாதீய படிநிலையில் இருந்துக் கொண்டு, நாம் இன்னொருவனைத் தாழ்ந்தவனாக, அடிமையாகப் பார்ப்பதென்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

பிள்ளைகளைக் கொல்லும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது.? பெற்ற பிள்ளைகளை விடவா இவர்களின் சாதீயம் பெரிது.? சக மனிதனை மனிதனாக நடத்திடாத சாதீய சமூகம் இருந்தால் என்ன.? அழிந்தால் என்ன.?

சாதீயம் தானாக சாகாது. நாம் தான் சாகடிக்க வேண்டும். நம்மிலிருந்து தொடங்காத மாற்றத்தை சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது முட்டாள்தனம். சாதீய இழிவு பார்க்கும் நிலையை விட்டொழிக்கும் நிலை ஏற்பட, அறிந்தும் அறியாமலும் நம் குருதிக்குள் இருக்கும் சாதீயத்தையும், சுயசாதீ திமிரையும் அடுத்தவனைத் தாழ்ந்தவனாகக் கருதும் இழிவெண்ணத்தையும் தீயிலிட்டு பொசுக்க வேண்டும். தொடர்ந்து நண்பர்களிடம், உறவினர்களிடமும் சாதீய இழிவை பொதுவெளியில் பேசுவோம். "சமத்துவம்" பேசிய தந்தை பெரியாரையும்,பாபாசாகிப் அம்பேத்கரையும் தொடர்ந்து வாசிப்போம். அவர்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுச் செல்வோம். வாசிப்பற்ற சமூகம் விழிப்புணர்வற்றே இருக்கும். 

தொடர் வாசிப்பே விழிப்படைவதற்கான மூலதனம்.

மேலும் உறுதியாகக் கூறுகிறேன். நானொரு சாதீய இந்துவாகச் சாகமாட்டேன்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...