2000ம் ஆண்டு தமிழகத்தையே பதற்றத்தில் உலுக்கிய சம்பவம், சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் ஆங்காங்கு அரங்கேற்றிய கலவரத்தின் போது, தர்மபுரியில் மூன்று கல்லூரி மாணவிகளைப் பேருந்தில் தீ வைத்து எரித்துக் கொன்றது. இவ்வழக்கில் மூவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்பது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் எம்ஜீஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி இவர்களுக்கு ஆளுநரின் ஒப்புதலோடு தமிழக அரசு விடுதலை அளித்துள்ளது.
எழுவரின் விடுதலையை நிராகரித்துவிட்டு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த குற்றவாளிகளை நன்னடத்தைக் காரணம் காட்டி ஒப்புதல் அளித்துள்ள ஆளுநருக்கு, கருணை மனுக்களோடு இருபத்தேழு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் சிதைந்துக் கொண்டிருக்கும் எழுவரின் நன்னடத்தைக் கண்ணுக்குத் தெரியவில்லையா.? அல்லது அந்த எழுவரைப் பற்றிய நினைவிலேயே இல்லையா.?
தன் கட்சியைச் சேர்ந்த குற்றவாளிகளை மட்டும் நன்னடத்தையென்றுச் சொல்லி விடுதலைச் செய்யும் ஆளுங்கட்சி அரசானது, தன் இனத்தைச் சார்ந்த எழுவரை விடுவிக்காதது அல்லது விடுவிக்க பெரும் முயற்சி செய்யாதது தமிழர்களுக்குச் செய்யும் துரோகமில்லாமல் வேறென்ன.?
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment