அடுத்தமுறை எங்கேயாவது
பார்க்க நேர்ந்தால்
தயைக் கூர்ந்து
என்னைக் கண்டதுண்டமாக
வெட்டி வீசிவிடுங்கள்
மனைவியோடோ
காதலியோடோ அலைபேசியில்
அன்பை முத்தங்களாகவும்
காதலை இதயங்களாகவும்
நீங்கள் பறக்கவிட்டுக் கொண்டிருக்கையில்
நான் உங்களுக்குத் தெரியாமல்
அதை நோட்டமிட்டவாறு இருந்திருக்கிறேன்
நீங்கள் தவறவிட்ட ரூபாய்த் தாள்களை
உங்களிடம் சொல்லாமல்
யாரும் கவனித்திடாத வேளையில்
அதனை என்
சட்டைப் பைக்குள் அமுக்கிவிட்டு
கமுக்கமாக வந்திருக்கிறேன்
பணம் எடுக்க
ஏடிஎம் வாசல் வரிசையில்
நிற்கையில்
உங்கள் கடவு எண்ணைக்
கவனிக்காதவனைப் போல்
நான் நடித்துத் தான் கொண்டிருந்தேன்
அந்த நடைபாதையிலும்
நின்ற இடத்திலும்
நீங்கள் முகம் சுளிக்கும்படி
எச்சிலைக் காறித் துப்பிவிட்டுத்
திரும்பி பார்க்காமல்
சென்றது நானே தான்
வங்கியில் கடன்பட்டும் வட்டி கட்டியும்
வாங்கி நிறுத்தியிருக்கும்
உங்களது புதிய வாகனத்தில் ஆணியால்
வரி வரியாய் இழுத்துவிட்டு
அல்பச் சுகம் காணும் அடியனும் நானே தான்
ஆடை விலகியிருப்பதை அறியாமல்
வேலையில் நீங்கள் கவனமாக இருக்கையில்
திடீரென யாரோ கவனிக்கும் பிரக்ஞை ஏற்பட்டு
உடனே சரி செய்து சுற்றும்முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு "நல்லவேளை யாரும்
கவனிக்கவில்லை" என்று பெருமூச்சு விட்டிருப்பீர்களேயானால்
பாவமான பெண் நீங்கள்
உங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்.
என் கண்ணாடி கண்களில் மாமிசத்தை ருசிக்கும் வெறியுடன் உங்கள் மார்பு பிளவுகளை
மேய்ந்தே இருந்திருக்கிறேன்
இவ்வளவு இடைஞ்சல்களையும்
இன்னும் பல தொல்லைகளையும்
தொடுத்துக் கொண்டேயிருந்தாலும்
எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல்
உங்கள் கண்ணில் பட்டும் படாதவாறு
உலவிக் கொண்டிருக்கிறேன்.
ஒருவேளை நீங்கள் என்னைச் சந்தித்தாலும் கொல்லமாட்டீர்கள்
ஏனென்றால் நீங்களும் என்னைப் போல் தானே
இருக்கிறீர்கள்.?
கார்த்திக் பிரகாசம்...
பார்க்க நேர்ந்தால்
தயைக் கூர்ந்து
என்னைக் கண்டதுண்டமாக
வெட்டி வீசிவிடுங்கள்
மனைவியோடோ
காதலியோடோ அலைபேசியில்
அன்பை முத்தங்களாகவும்
காதலை இதயங்களாகவும்
நீங்கள் பறக்கவிட்டுக் கொண்டிருக்கையில்
நான் உங்களுக்குத் தெரியாமல்
அதை நோட்டமிட்டவாறு இருந்திருக்கிறேன்
நீங்கள் தவறவிட்ட ரூபாய்த் தாள்களை
உங்களிடம் சொல்லாமல்
யாரும் கவனித்திடாத வேளையில்
அதனை என்
சட்டைப் பைக்குள் அமுக்கிவிட்டு
கமுக்கமாக வந்திருக்கிறேன்
பணம் எடுக்க
ஏடிஎம் வாசல் வரிசையில்
நிற்கையில்
உங்கள் கடவு எண்ணைக்
கவனிக்காதவனைப் போல்
நான் நடித்துத் தான் கொண்டிருந்தேன்
அந்த நடைபாதையிலும்
நின்ற இடத்திலும்
நீங்கள் முகம் சுளிக்கும்படி
எச்சிலைக் காறித் துப்பிவிட்டுத்
திரும்பி பார்க்காமல்
சென்றது நானே தான்
வங்கியில் கடன்பட்டும் வட்டி கட்டியும்
வாங்கி நிறுத்தியிருக்கும்
உங்களது புதிய வாகனத்தில் ஆணியால்
வரி வரியாய் இழுத்துவிட்டு
அல்பச் சுகம் காணும் அடியனும் நானே தான்
ஆடை விலகியிருப்பதை அறியாமல்
வேலையில் நீங்கள் கவனமாக இருக்கையில்
திடீரென யாரோ கவனிக்கும் பிரக்ஞை ஏற்பட்டு
உடனே சரி செய்து சுற்றும்முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு "நல்லவேளை யாரும்
கவனிக்கவில்லை" என்று பெருமூச்சு விட்டிருப்பீர்களேயானால்
பாவமான பெண் நீங்கள்
உங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்.
என் கண்ணாடி கண்களில் மாமிசத்தை ருசிக்கும் வெறியுடன் உங்கள் மார்பு பிளவுகளை
மேய்ந்தே இருந்திருக்கிறேன்
இவ்வளவு இடைஞ்சல்களையும்
இன்னும் பல தொல்லைகளையும்
தொடுத்துக் கொண்டேயிருந்தாலும்
எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல்
உங்கள் கண்ணில் பட்டும் படாதவாறு
உலவிக் கொண்டிருக்கிறேன்.
ஒருவேளை நீங்கள் என்னைச் சந்தித்தாலும் கொல்லமாட்டீர்கள்
ஏனென்றால் நீங்களும் என்னைப் போல் தானே
இருக்கிறீர்கள்.?
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment