திருமணத்தின் போது
முதன்முறையாக
அம்மாவும் அப்பாவும் ஒன்றாக நின்று
எடுத்துக் கொண்ட
அந்தப் புகைப்படம்
ஈரங்களின் தொடர் ஈரத்தினால்
அரித்திட்ட மரச் சட்டத்தில்
தூசி ஒட்டடைகளின் பேராதரவுடன்
பழுப்பேறிய ஆணியின் கடைசி ஊசலாட்டத்தில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
அம்மாவும் அப்பாவும்
அப்படியொரு பொருத்தமான துணைவர்கள் என்று
அப்புகைப்படத்தைப் பார்த்தால் சொல்ல முடியாது
அப்பா ஒல்லி உயரம்
அம்மா கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் குண்டு
ஆனால் கலையான முகம்
அப்பாவின் முகத்தின் துளிக்கும் சிரிப்பில்லை
அம்மாவின் இதழ்களிலோ
லேசாக வழிந்தது புன்னகையை போன்ற ஏதோவொன்று
ஆனால்
புன்னகைக்கான சாயலேதும்
அந்த முகத்தில் இல்லை
அது
புகைப்படத்திற்கான
போலி புன்னகை என்றுத்
தெளிவாய் தெரிகிறது
போலியாயினும்
புன்னகைக்கு மட்டும்
தனி மதிப்பு
இருக்க தான் செய்கிறது
அம்மாவின் போலி புன்னகையும்
அழகாய் இருக்கிறது
கார்த்திக் பிரகாசம்...
முதன்முறையாக
அம்மாவும் அப்பாவும் ஒன்றாக நின்று
எடுத்துக் கொண்ட
அந்தப் புகைப்படம்
ஈரங்களின் தொடர் ஈரத்தினால்
அரித்திட்ட மரச் சட்டத்தில்
தூசி ஒட்டடைகளின் பேராதரவுடன்
பழுப்பேறிய ஆணியின் கடைசி ஊசலாட்டத்தில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
அம்மாவும் அப்பாவும்
அப்படியொரு பொருத்தமான துணைவர்கள் என்று
அப்புகைப்படத்தைப் பார்த்தால் சொல்ல முடியாது
அப்பா ஒல்லி உயரம்
அம்மா கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் குண்டு
ஆனால் கலையான முகம்
அப்பாவின் முகத்தின் துளிக்கும் சிரிப்பில்லை
அம்மாவின் இதழ்களிலோ
லேசாக வழிந்தது புன்னகையை போன்ற ஏதோவொன்று
ஆனால்
புன்னகைக்கான சாயலேதும்
அந்த முகத்தில் இல்லை
அது
புகைப்படத்திற்கான
போலி புன்னகை என்றுத்
தெளிவாய் தெரிகிறது
போலியாயினும்
புன்னகைக்கு மட்டும்
தனி மதிப்பு
இருக்க தான் செய்கிறது
அம்மாவின் போலி புன்னகையும்
அழகாய் இருக்கிறது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment