Skip to main content

ஊனமுற்ற வாழ்க்கை

வாடகை
வருடாவருடம்
வரையறை இல்லாமல்
ஏறிக் கொண்டிருக்கிறது

அது
ஓர் அறை ஓர் பாத்ரூம்
ஓர் சமையலறை என்பதனாலான
வீடு என்ற ஒன்றிற்கான
வாடகையா
இல்லை
ஒட்டுமொத்த உலகப் பரப்பின்
ஒரு பகுதிக்கான
வாடகையா
தெரியவில்லை

சம்பளம்
நத்தையே தோற்றுவிடும்
வேகத்தில்
உயர்கையில்
வாடகையோ
நசுக்கியே கொன்றுவிடும்
வெறியில் வேடிக்கைக்
காட்டுகிறது

ஊனமுற்ற இவ்வாழ்க்கைத்
தொடர்ந்து
ஊனமாகிக் கொண்டே
உதிர்கிறது

நான் அணிந்து
நைந்து
வேண்டாமென்று
தூக்கியெறிந்த சட்டையை
உடுத்தி வளர்ந்த இளையவன்
தான் புதிதாய் கட்டிய
வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு
அழைத்திருக்கிறான்

நேரில் வரமுடியவில்லையென்று
எனக்கும் மனைவிக்கும்
அழைப்பிதழை
தனித்தனியாக
வாட்சப்பில்
அனுப்பியிருக்கிறான்

அழைப்பிதழை
படித்தவாறே என்னைப் பார்த்து
பெருமூச்சு விடுகிறாள்
மனைவி

அந்தப் பார்வையில்
பாய்ந்து வந்த
முட்கள்
இரத்தம் வழிவதைப்
பொருட்படுத்தாது
என் கண்களைக்
குத்திக்
கிழித்தன

அதிலிருந்து
தப்பிக்க பிள்ளைகளைக்
கவனித்தேன்
கண்டிப்பாக போக வேண்டுமென்று
அவர்கள் இப்போதே
அடம்பிடிக்க
ஆரம்பித்துவிட்டார்கள்

எனக்கோ
எப்படியாவது
இந்த இரவைக்
கடந்துவிட்டால் போதும்
என்றிருக்கிறது

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...