'அழ வேண்டும்'
போலிருக்கிறது
அழுதுவிட்டால்
ஆசுவாசமாய் இருக்கும்
உடைந்து போன மனதை
ஒட்டும் ஈரப்பசையாய்
கதகதவென்று இறங்கும்
உதிர்ந்து விழும் துளிகளில்
தாங்கல் குறையும்
நம்பிக்கை முளைக்கும்
ஆறுதல் பிறக்கும்
அது
நம் கரங்களால் நம்மை
நாமே அணைத்துக்
கொள்வதை போல
ஆனால் அந்த முதல்துளி
அதுதான் சிரமம்
கார்த்திக் பிரகாசம்...
போலிருக்கிறது
அழுதுவிட்டால்
ஆசுவாசமாய் இருக்கும்
உடைந்து போன மனதை
ஒட்டும் ஈரப்பசையாய்
கதகதவென்று இறங்கும்
உதிர்ந்து விழும் துளிகளில்
தாங்கல் குறையும்
நம்பிக்கை முளைக்கும்
ஆறுதல் பிறக்கும்
அது
நம் கரங்களால் நம்மை
நாமே அணைத்துக்
கொள்வதை போல
ஆனால் அந்த முதல்துளி
அதுதான் சிரமம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment