சொந்த ஊருக்குக்
கூட்டிச் செல்லும் பாதை
மாறிடாமலிருக்க
நூல் பிடித்தாற் போல்
இரயில் தண்டவாளத்தையொட்டியே
நடந்த அப்பாவிகள் நாங்கள்
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளை
பறக்கும் விமானத்தில் அழைத்துச் செல்ல
அரசாங்கமொன்றும் அடி முட்டாள் இல்லை
பசியன்றி வேறறியா
போக்கற்றவர்களுக்கு பேருந்து எதற்குச்
சொகுசாக
நடந்தே சென்றிட நிர்பந்தித்த அரசு
ஏழைகளுக்கானது என்பதில் எங்களுக்கு
எவ்வித அய்யமும் இல்லை
எங்களுக்கும் இரயில் தண்டவாளத்திற்கும்
எப்போதுமே ஏகராசி
அழைத்துச் செல்ல வராத இரயில்
அன்று ஏற்றிக் கொல்ல இலவசமாய் வந்தது
வைரஸினால் பாதித்து இறந்தவர்களின்
பொதுப்பட்டியலில் எங்களின் எண்ணிக்கையைச்
சேர்க்க மாட்டார்கள்
ஆனால் இறந்துவிட்டால் பசிக்காது
என்றறிருந்திருந்தால்
என்றோ மரித்திருப்போம் மகிழ்ச்சியாக
கார்த்திக் பிரகாசம்...
கூட்டிச் செல்லும் பாதை
மாறிடாமலிருக்க
நூல் பிடித்தாற் போல்
இரயில் தண்டவாளத்தையொட்டியே
நடந்த அப்பாவிகள் நாங்கள்
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளை
பறக்கும் விமானத்தில் அழைத்துச் செல்ல
அரசாங்கமொன்றும் அடி முட்டாள் இல்லை
பசியன்றி வேறறியா
போக்கற்றவர்களுக்கு பேருந்து எதற்குச்
சொகுசாக
நடந்தே சென்றிட நிர்பந்தித்த அரசு
ஏழைகளுக்கானது என்பதில் எங்களுக்கு
எவ்வித அய்யமும் இல்லை
எங்களுக்கும் இரயில் தண்டவாளத்திற்கும்
எப்போதுமே ஏகராசி
அழைத்துச் செல்ல வராத இரயில்
அன்று ஏற்றிக் கொல்ல இலவசமாய் வந்தது
வைரஸினால் பாதித்து இறந்தவர்களின்
பொதுப்பட்டியலில் எங்களின் எண்ணிக்கையைச்
சேர்க்க மாட்டார்கள்
ஆனால் இறந்துவிட்டால் பசிக்காது
என்றறிருந்திருந்தால்
என்றோ மரித்திருப்போம் மகிழ்ச்சியாக
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment