முன்னாள் காதலர்களைப் பற்றிப்
பேசிக் கொண்டிருந்தோம்
நானும் என்னவளும்
அவளின் அந்நாள்
காதலனுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது
அந்நாளைய என்
காதலிக்கு விரைவில் திருமணம்
மாடு அசைபோடுவதைப் போல்
சர்வ சாதாரணமாய் நிகழ்ந்தது
அந்த உரையாடல்
ஊற்றெடுத்த நினைவுகளின் நீட்சியைக்
கண்களில் தவிர்க்க முடியவில்லை
இருவராலுமே
ஆரத் தழுவினோம்
முத்தம் சுவைத்தோம்
இறுகணைத்த சூட்டில்
விட்டுச் சென்ற தத்தம்
காதலர்களுக்கான நன்றி
காற்றில் மிதந்தது
கார்த்திக் பிரகாசம்...
பேசிக் கொண்டிருந்தோம்
நானும் என்னவளும்
அவளின் அந்நாள்
காதலனுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது
அந்நாளைய என்
காதலிக்கு விரைவில் திருமணம்
மாடு அசைபோடுவதைப் போல்
சர்வ சாதாரணமாய் நிகழ்ந்தது
அந்த உரையாடல்
ஊற்றெடுத்த நினைவுகளின் நீட்சியைக்
கண்களில் தவிர்க்க முடியவில்லை
இருவராலுமே
ஆரத் தழுவினோம்
முத்தம் சுவைத்தோம்
இறுகணைத்த சூட்டில்
விட்டுச் சென்ற தத்தம்
காதலர்களுக்கான நன்றி
காற்றில் மிதந்தது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment