வளைந்த மூக்கெனக்கு
இயல்பில் வளைவு இல்லை
நயவஞ்சகமாய் வளைக்கப்பட்டது
கட்டியிருக்கும் நீள் கயிறு
தொப்புள் கொடியில்லை
கழுத்தை இறுகப் பிடித்திருக்கும்
தூக்குக் கயிறு
துளைக்கப்பட்டமென் புழுக்களின்
மரண ஓலமும்
இரைக்காக வேண்டி பின்
இரையானவற்றின்
இளஞ்சூட்டு இரத்தக் கறைகளும்
என் மூக்கின் அடையாளங்கள்
முனையில் பிடித்திருக்கும்
இரும்புக் கரத்திற்கு
நான் தூண்டில்
செருகிய மென் புழுக்களுக்கு
நான் துன்பன்
மிதந்து வரும் மீன்களுக்கு
நான் துரோகி
எனக்கு நான் யாரோ
கார்த்திக் பிரகாசம்...
இயல்பில் வளைவு இல்லை
நயவஞ்சகமாய் வளைக்கப்பட்டது
கட்டியிருக்கும் நீள் கயிறு
தொப்புள் கொடியில்லை
கழுத்தை இறுகப் பிடித்திருக்கும்
தூக்குக் கயிறு
துளைக்கப்பட்டமென் புழுக்களின்
மரண ஓலமும்
இரைக்காக வேண்டி பின்
இரையானவற்றின்
இளஞ்சூட்டு இரத்தக் கறைகளும்
என் மூக்கின் அடையாளங்கள்
முனையில் பிடித்திருக்கும்
இரும்புக் கரத்திற்கு
நான் தூண்டில்
செருகிய மென் புழுக்களுக்கு
நான் துன்பன்
மிதந்து வரும் மீன்களுக்கு
நான் துரோகி
எனக்கு நான் யாரோ
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment