நன்கறிந்த நண்பனுடன் விவாதம்
விவாத மூர்க்கம் ஒருபுறம்
கருத்தியல் கலகம் மற்றொருபுறம்
மய்ய சரடிலிருந்து விலகி
வாதம் வென்றிடும் முனைப்பில்
அவனது குறைகளையெல்லாம் பட்டியலிட்டு
அவன் கால்களை உடைத்தேன்
பதிலுக்கு
எனது குறைகளைக் குறிப்பிட்டு
என் மூக்கை உடைத்தான்
மாறி மாறி குத்தி
குருதிச் சொட்டச் சொட்ட
மூன்றாம் நபர் தலையிட்டு
வாதத்தை முடித்திடும் போதுதான்
இருவருக்குமே உரைத்தது
நண்பர்கள் நாங்கள்
Comments
Post a Comment