ஒவ்வொரு நாளும்
பழையதையெல்லாம் கழித்துவிட்டு
கண்ணுக்குத் தென்படும் யாவையும்
புதியவற்றால் நிரப்பிடுவான்
அவன்
இல்லையேல் குறைந்தபட்சம்
இருந்த இடத்திலிருந்து மாற்றி
வேறொரு இடத்திற்குள்ளாவது
புகுத்திவிடுவான்
காலத்துக்கேற்ப
புதியதாக மறுக்கும்
அவனது சுயத்தை
அம்மணமாக்கவே
இந்த ஏற்பாடு
Comments
Post a Comment