சிறு வயதிலிருந்தே
கண்ணில் தென்படுவது
காலில் உதைபடுவதென
எல்லாமும் நீலம்
மிகவும் பிடித்தமான நிறம்
நீலம் பிடிக்கக் காரணமென்று
நினைவடுக்கில் பதிவெங்கும் இல்லை
ஆனால் இதர இத்யாதிகள் பிடிப்பதற்கு
நீலம் ஒன்றே போதுமான காரணம்
ஒரேயொரு விலக்கு
நீல நிறத்திற்காகக்
கிருஷ்ணரைப் பிடித்திருந்தது
அம்பேத்கரை
அறிந்திடும் வரையில்
Comments
Post a Comment