பேருந்திலிருந்து இறங்குவதற்குள்
செல் போனில் சேமித்துள்ள
அனைத்து எண்களால் ஆகிய முகங்களிடமும்
கேட்டுவிட்டேன் கடனாய்
ஆயிரம் ரூபாய்
இனி துழாவுவதற்கு எண்கள் இல்லை
முகங்களும் இல்லை
நெரிசலில் மூச்சு முட்ட
ஊரைச் சுற்றிக் காட்டிய பேருந்தும்
விருப்பமில்லா புழுக்கத்தில் கிடத்திவிட்டுக்
கடந்துவிட்டது
கடன் போர்த்திய இருளுடன் மெல்லக் கவிகிறது இரவு
சிறுக சிறுக அழுகிக்கொண்டிருக்கிறது நாளை
Comments
Post a Comment