அந்த
சிவப்பு கலர் யானை பொம்மை தான்
உனைக் குதூகலித்து
உன் அழுகையை நிறுத்தியது
எனக்குத் தெரியும்
மற்றவர்கள் பெருமை பீற்றுகிறார்கள்
நானே அழுகையை நிறுத்தினேன்
என்னிடம் வந்ததும் அழுகை நின்றது
எந்தக் குழந்தையும் என்னிடம் வந்தால்
அழுகையை முழுங்கிவிடும்
மகளே!
மன்னித்துவிடு
பாவம் அவர்கள்
குழந்தைகள்!
Comments
Post a Comment