உறக்கத்தில் பிஞ்சு கரங்களை
நீட்டி மடக்கி
கால்களை
முடுக்கி
நெட்டி முறிக்கிறாள் மகள்
நிமிர்ந்த வானில்
நட்சத்திரங்கள் அரண்டு புரண்டு
கடலில் வீழ்கின்றன
எழுந்து நின்ற கடல்
அருவியாய் கொட்ட
திமிலங்கள் காற்றில் பறக்கின்றன
உருண்டு வரும் திமிலங்களை
உருட்டி விளையாடும்
பூனைகள்
நெளிந்த நிலவு
அறுங்கோணமாகி
வாலறுந்த குரங்காய் திகைத்து
அந்தரத்தில் மிதக்கிறது
பிடிப்பின்றி
அதுதது
அதனதன் இடத்தில்
திகைத்து நிற்க
இரவென்பதை மறந்து
இருள் உறியும் நேரம்
மலர்ந்த முகத்துடன்
மறுபடியும் உறங்கிவிட்டாள்
மகள்
நீள்கிறது இரவு
Comments
Post a Comment