மீராசாது - கே ஆர் மீரா
மொழிபெயர்ப்பு - மோ.செந்தில் குமார்
வன்மம்.. பித்தேறிய காதலின் வன்மம். உதறித் தள்ளிய காதலை, அந்தக் காதலாலேயே வஞ்சித்துப் பலி தீர்க்கும் மிக நேர்த்தியான படைப்பு.
நாவல் இப்படித் தொடங்குகிறது,
"காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப் போகும், திரிந்து போகும், விஷமாகிவிடும். மாதவன், எனக்கு அந்த விஷத்தைக் கொடுத்தான். நான் சாகவில்லை, அதற்குப் பதிலாக அவனைக் கொன்றுவிட்டேன்"
சொல்லப்போனால், கதையின் முடிவுமே இதுதான்.
வாசகனுக்குச் சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்திடும் வகையில் எந்தவொரு இடத்திலும் மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்ற எண்ணமே எழாத அளவிற்கு, செறிவான மொழியில் செம்மையாக மொழியாக்கம் செய்திருக்கிறார் மோ.செந்தில் குமார்.
உண்மையைத் தெரிந்து கொள்ள, திரும்பிச் செல்லவே முடியாத தூரங்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது.🖤
Comments
Post a Comment