கணப்பொழுதில் இலகுவாக நடந்து முடிந்துவிடும் எத்தனையோ தருணங்களை ராஜா சந்திரசேகரின் கவிதைகள் ஆழமாகப் பேசுகின்றன.
//
சபிக்கப்பட்டவனின் கவிதையில்
தேவனின் சொற்கள்
இருந்தன
"பிரான்சிஸ் கிருபா"வை நினைவுபடுத்தும் இந்த வரிகளை எளிதில் கடக்க முடியவில்லை.
//
வேறு வேறு அலைகளால்
தன்னைத் திருத்திக் கொள்கிறது
கடல்
//
பாறை நான்
உடைபட
அன்பின் பூவொன்றை
மேல் வை
//
எல்லோரிடம்
தப்பித்து வந்து
என்னிடம் அகப்பட்டுக் கொண்டேன்
//
நம்பிக்கையின் மேல்
அரும்பி இருந்த
பனித்துளி
உலரவே இல்லை
//
எழுதும் போது
இடம் பெற்று
திருத்தும் போதும்
நீக்கப்பட்ட
சொல் நான்
//
நாம் காதலைப் பற்றி
பேசவே இல்லை
நாம் பேசிய
எல்லாவற்றிலும்
அது இருந்தது
//
என்னைச் சேர்த்து
கூட்டினாலும்
பூஜ்யமே வருகிறது
//
என் பசி
கூப்பிட்டு
அவர் பசிக்கு
ஏதாவது
வாங்கித் தரச் சொன்னது
//
பெரு வனப்
புல் நான்
என்ற பெருமிதம்
எனக்குண்டு
- கார்த்திக் பிரகாசம்
Comments
Post a Comment