“சுப்பையாத் தேவரின் கனவு” என்ற சிறுகதையில்,
பெரிய மனிதர்கள் என்று இருப்பவர்கள் பணக்காரராயிருந்தாலும், ஏழைகளாயிருந்தாலும் கௌரவம் என்ற மேல் பூச்சு இல்லாமல் போகாது. அந்த மேல் பூச்சில்தான் அவர்கள் வீட்டு சுப, அசுப காரியங்கள் தடபுடலாக நடக்கும். இந்த விதிக்கு விலக்கானவரல்ல சுப்பையாத் தேவர். அவருடைய ஜீவனத்துக்கு வேண்டிய அளவுக்கு மட்டும் மிகவும் சுருக்கமான சொத்து சுகம் இருந்த போதிலும், அம்பலக்காரர் என்ற பெரிய மனுசன் பட்டம் இருக்கையில் கல்யாணத்தை, அதுவும் ஒரே தங்கைக்குச் செய்யும் கல்யாணத்தை, வரவு செலவு பார்த்துச் செய்தால் அவ்வளவாகச் சோபிக்காது. ஆகவே கொஞ்சம் தாராளமாகவே பணத்தை, நகை நட்டு, சாப்பாடு, மேளம் என்று பலவகைகளில் இறைத்தார்.
Comments
Post a Comment