Skip to main content

Posts

"நில்லுங்கள் ராஜாவே"

சுஜாதாவின் பிரம்மாண்டங்களில் மற்றுமொன்று "நில்லுங்கள் ராஜாவே". முதல் பக்கத்தில் இருந்தே தொடங்கிவிடும் பரபரப்பு, கடைசிப் பக்கம் முடியும் வரையிலும் துளிக்கூட குறைவில்லாமல் கதைக்குள் உள்ளிழுத்துச் சென்று உலாவ விடுகிறது. ஒரு நினைவுகளை அகற்றி அவனின் ஆழ்மனதை வசப்படுத்தி, அவனுக்குள் வேறொரு மனிதனின் நினைவுகளை புகுத்தி, அதனை அவனின் ஆழ்மனதுக்குள் நன்கு பதிய வைத்து, "நான் இவன் தான்" என்று தன்னைப் பற்றிய நினைவுகளே இல்லாமல், நினைவுகள் புகுத்தப்பட்ட அந்த மனிதனாகவே மாறிவிடும் ஒரு சாமானிய மனிதனின் கதை. நினைத்துப் பார்க்கும் போதே தலைச்சுற்ற வைக்கிற கதையமைப்பு. முதல் பாதியில் நினைவுகள் புகுத்தப்பட்ட அந்த மனிதனைச் சுற்றியே வலம் வரும் கதை, இரண்டாம் பாதியில் அதிர்ச்சியளிக்கும் விதமாக " ' ஆழ்மனதை கட்டுப்படுத்தும் மருத்துவம்' ' புதிதாகக் குடியாட்சி பெற்ற சிலியானா என்ற கம்யூனிச நாடு' மற்றும் 'அமெரிக்காவின் சி.ஐ.ஏ ' " என்று பரந்து விரிகிறது. ஏற்கனவே இருக்கும் " ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், ரத்தம் ஒரே நிறம், பிரிவோம் சந்திப்போம் " என்று நீளும் சுஜாதாவ...

ஊரும் சேரியும்

இது சித்தலிங்கையாவின் சுயசரிதை. ஒரு தலித்தின் சுயசரிதை. ஆனால் இது சாதித்தவனின் சுயபுராணமல்ல. தான் அனுபவித்த கஷ்டங்களின் வெற்றுப் பிதற்றல் அல்ல. அதேசமயம் அதைத் தாண்டி ஜெயித்த சுயதம்பட்டமமுமல்ல. இது சேரி வாழ் மக்களின் வாழ்க்கை. அவர்களின் மீது  அனுதாபத்தை ஏற்படுத்தாத எதார்த்தனமான அவர்தம் அன்றாட வாழ் நிகழ்வுகளின் தொகுப்பில் தன்னையும் ஒரு பாத்திரமாக்கிக் கொண்டு தான் வாழ்ந்த நாட்களை, கடந்து வந்த பாதையை எட்டிநின்று வேடிக்கைப் பார்க்கும் கடைநிலை பார்வையாளனாய் நகர்த்தும் கதையோட்டத்தினூடாக அம்மக்களின் வறுமை, இயலாமை, மூடநம்பிக்கை, கல்வி ஆசை, குடும்ப உறவு, அறியாமை, மேல் சாதியினரைப் பகைத்துக் கொள்ளாமை, அவர்களுக்குக் கீழ்படிதல், அவமானம்,  அடிமைத்தனம் என்றறிந்தே அடிமையாய் இருப்பது, மூன்று வேளைச் சாப்பிடுவதற்கான பிரயத்தனம், நல்ல சாப்பாட்டுக்கான ஏக்கம், உரிமைப் போராட்டம் என்று அனைத்துக் கூறுகளையும் கண்முண்ணே படமெடுத்து  வைக்கிறார் சித்தலிங்கையா.. கார்த்திக் பிரகாசம்...

நான் ஒரு இந்துவாகச் சாகமாட்டேன்

"கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்ததகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது ஆனால் அறுவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்ன...

மனோரதம்

மரணிக்கும் தருவாயிலும் பேரன்பும் பேரழகியுமாய் உணர வேண்டுமா.? ஓர் கவிஞனைக் காதலியிங்கள்...!!! மரணித்த பின்பும் இம்மண்ணில் மறுமுறை சுவாசிக்க வேண்டுமா.? ஓர் எழுத்தாளனை ...

விஜயா

"ஏய்...! விஜயா எப்டி இருக்க.?" "நல்லா இருக்கேன் பாயம்மா. நீ எப்டி இருக்க" 'நல்லா இருக்குறனால தான் போறவள நிக்க வெச்சிப் பேசிட்டுக் கெடக்கேன்'. "ம்ம்ம் அதும் சரிதான்.. இதான் என் ...

வேடிக்கை மனிதன்

அங்கு யார் யாரோ அவசர அவசரமாய் வளர்ந்து அவசர அவசரமாய் சம்பாதித்து அவசர அவசரமாய் அனைத்தையும் அனுபவித்து அவசர அவசரமாய் சாவையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...!!! நான் ...

ஆதிரை

சீவி சிங்காரித்து வழிந்தோடும் அழகில் ஒரு சிறு துளி மட்டும் துடைத்தெடுத்து மழலையின் கன்னத்தில் தீட்டிட்ட திருஷ்டிப் பொட்டை போல அவளது கண்ணின் கருவிழிக்கருகிலே...