சீவி
சிங்காரித்து
வழிந்தோடும் அழகில்
ஒரு சிறு துளி மட்டும்
துடைத்தெடுத்து
மழலையின்
கன்னத்தில் தீட்டிட்ட
திருஷ்டிப் பொட்டை போல
அவளது
கண்ணின்
கருவிழிக்கருகிலேயே
நிரந்தர திருஷ்டிப் பொட்டாய்
அழகின் அரணாய்
அலங்கரிக்கும்
மச்சம்...!!!
அது
மச்சம் மட்டுமல்ல
மூன்றாம் விழி...!!
அவளின்
ஆடையில்
எவ்வித சலனமுமின்றி
சீரான இடைவெளியில்
சிதறிக் கிடக்கும்
சிரிக்கும் புத்தனின்
முகங்கள்...!!!
புத்தனும் துறவைத்
வெறுத்தொதுக்கிவிடும்
அவளது
புன்னகை..!!!
ஆனால்
அவளொன்றும் ஆர்ப்பரிக்கும்
அழகியல்ல...!!!
அவள்
முவ்விழி அழகி...!!!
அவள்
ஆதிரை அழகி...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment