அங்கு
யார் யாரோ
அவசர அவசரமாய் வளர்ந்து
அவசர அவசரமாய் சம்பாதித்து
அவசர அவசரமாய் அனைத்தையும் அனுபவித்து
அவசர அவசரமாய் சாவையும்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்...!!!
நான் நிதானமாக நின்று
அனைத்தையும் வேடிக்கைப்
பார்க்கிறேன்...!!!
அவர்களிடம்
நான் சொல்லிக் கொள்ள
நினைப்பதெல்லாம் ஒன்றே
ஒன்று தான்...!!!
நீங்கள் முன்னால் சென்றுவிட்டீர்கள்...!!!
நான் கொஞ்சம் பொறுமையாக
பின்னால் வருகிறேன்...!!!
அவ்வளவு தான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment