இது சித்தலிங்கையாவின் சுயசரிதை. ஒரு தலித்தின் சுயசரிதை. ஆனால் இது சாதித்தவனின் சுயபுராணமல்ல. தான் அனுபவித்த கஷ்டங்களின் வெற்றுப் பிதற்றல் அல்ல. அதேசமயம் அதைத் தாண்டி ஜெயித்த சுயதம்பட்டமமுமல்ல.
இது சேரி வாழ் மக்களின் வாழ்க்கை. அவர்களின் மீது அனுதாபத்தை ஏற்படுத்தாத எதார்த்தனமான அவர்தம் அன்றாட வாழ் நிகழ்வுகளின் தொகுப்பில் தன்னையும் ஒரு பாத்திரமாக்கிக் கொண்டு தான் வாழ்ந்த நாட்களை, கடந்து வந்த பாதையை எட்டிநின்று வேடிக்கைப் பார்க்கும் கடைநிலை பார்வையாளனாய் நகர்த்தும் கதையோட்டத்தினூடாக அம்மக்களின் வறுமை, இயலாமை, மூடநம்பிக்கை, கல்வி ஆசை, குடும்ப உறவு, அறியாமை, மேல் சாதியினரைப் பகைத்துக் கொள்ளாமை, அவர்களுக்குக் கீழ்படிதல், அவமானம், அடிமைத்தனம் என்றறிந்தே அடிமையாய் இருப்பது, மூன்று வேளைச் சாப்பிடுவதற்கான பிரயத்தனம், நல்ல சாப்பாட்டுக்கான ஏக்கம், உரிமைப் போராட்டம் என்று அனைத்துக் கூறுகளையும் கண்முண்ணே படமெடுத்து வைக்கிறார் சித்தலிங்கையா..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment