"கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்ததகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது ஆனால் அறுவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன் நான் ஒரு இந்துவாகச் சாகமாட்டேன்" என்று முழங்கிய அம்பேத்கரின் பெயரை மாற்றியெழுதி, வரலாற்றைத் தமக்கேற்றவாறு திரித்தெழுதிக் கொள்ள முயல்கிறது அந்தக் காவிக் கூட்டம்.
"சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்" அறவே இல்லையென்று எந்த மதத்தை அம்பேத்கர் வெறுத்தொதுக்கினாரோ, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே அவரின் கருத்தியலுக்கு இன்று மெய்ச் சாட்சியமாகிக் கொண்டிருக்கின்றனர்.
"நீங்கள் அம்பேத்கரின் பெயரை மாற்றலாம், பெரியாரின் சிலைகளை உடைக்கலாம்". ஆனால் அவர்களின் கருத்தியல்களை அழிக்க முடியாது. அவர்கள் உண்டாக்கிய சிந்தனைகளை மாற்றிவிட இயலாது.
நீங்கள் எதிர்க்க எதிர்க்க, எங்களை ஒடுக்க நினைக்க நினைக்க நாங்கள் அம்பேத்கரையும், பெரியாரையும் மேலும் மேலும் ஆழமாக வாசிப்போம். மரத்தை வெட்டி வீழ்த்திவிடலாம். ஆனால் அதன் ஆணிவேரைப் பிடுங்கி வீசிட முடியாது. மீறி வீசினாலும் அது இன்னொரு இடத்தில் வேறொரு மரமாகத் தான் வளருமே தவிர அழிந்து விடாது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment