நாளை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன..
சாதனைப் படைத்த தன் பிள்ளைகளைத் தூக்கி வைத்து கொண்டாடும் அதே பெற்றோர்கள் அவர்கள் தோல்வியுறும் போது தோள் கொடுத்து அவர்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். உன் சாதனை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை தன் பிள்ளைகளுக்கு உணர வைக்க வேண்டும். மதிப்பெண் மட்டும் வாழ்கையை நிர்ணயப்பதில்லை என்ற உண்மையை முதலில் பெற்றோர்கள் உணர்ந்து அதை தன் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்..
அப்பொழுது தான் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மதிப்பில்லாமல் போகும் மதிப்பெண்காக மனதில் பல கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் இளம் பிஞ்சுகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க முடியும்.
நாளை மறுநாள் வரும் செய்தித்தாளில் குறைவான மதிப்பெண் அல்லது தேர்வில் தோல்வி என்ற காரணத்தால் மாணவன் அல்லது மாணவி தற்கொலை என்ற செய்தி வரக்கூடாது என்ற பயம் கலந்த எதிர்ப்பார்ப்புகளுடன்..
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment