சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் "தியாகராய நகரும்" ஒன்று. சொல்லப்போனால் சென்னையின் மிக முக்கியமான பகுதி. காலை முதல் இரவு வரை மனித தலைகளால் நிரப்பப்பட்டு இருக்கும். உயரமான கட்டிடத்தில் இருந்து பார்த்தால் வரிசையாக தெரியும் மனித தலைகள் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலை போல காட்சியளிக்கும். இன்னும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை.அந்த இடத்தில் டீக்கடை வைத்திருப்பவன் கூட கோடிஸ்வரன் ஆகி விடுவான். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதும்.
துணிக் கடை,நகைக் கடை என்று மக்கள் வெள்ளமாய்த் திரண்டு இருப்பர். நகைக் கடைக்கு வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் "இவனுக்கெல்லாம் மட்டும் எப்படி காசு கிடைக்குது" என்று பெருமூச்சு விட்டுவிட்டு செல்வான்.
மக்கள் அவர்கள் வாங்கும் பொருள்களின் கவர்கள், திண்பண்டங்களின்
பேப்பர்கள்,கடையில் கொடுத்த விளம்பர பேப்பர்கள் மற்றும் வழியில் கொடுக்கப்பட்ட விளம்பர அட்டைகள் என அனைத்துக் குப்பைகளையும் அந்த இடத்திலேயே எரிந்து விட்டு சென்று விடுவார்கள். அப்போது ஏதும் தெரியாது.. ஏனெனில் இது மிக சாதாரணமான விஷயம்.
ஆனால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து ரங்கநாதன் தெரு வழியாக நடந்து வந்தால் ஒவ்வொரு கடைக்கு வெளியையும் 20 முதல் 30 நபர்கள் இருக்கின்றனர். சிறுவர் முதல் வயதான பாட்டி வரை.. அவர்கள் செய்யும் வேலை உண்மையிலேயே மனதை நெகிழ வைக்கிறது. ஒவ்வொரு கடைக்கு முன்னும் அவர்கள் மற்றவர்கள் இட்டுச் சென்ற குப்பைகளையும் கழிவுகளையும் தங்கள் கையால் அள்ளிச் சுத்தம் செய்துக் கொண்டிருக்கின்றனர். யாரோ விட்டுச் சென்ற குப்பைகளை யாரோ இவர்கள் சுத்தம் செய்துக் கொண்டிருக்கின்றனர். இதுக்கு ஒரு சூப்பர்வைசர் வேற.. அத அள்ளு இத அள்ளு என்று அதிகாரம் செய்ய. இதைப் பார்த்த அடுத்த நொடியே ஒரு குற்ற உணர்ச்சி மனதை அடைத்துக் கொண்டது. ஏனெனில் நானும் அதே சாலையில் எத்தனையோ முறை குப்பைகளை எறிந்து விட்டுச் சென்றிருக்கிறேன்.
நாம் செய்யும் சின்ன செயல் கூட கண்ணுக்குத் தெரியாமல் யாரோ ஒருவரை கஷ்டபடுத்துகிறது. நம் கழிவுகளை குப்பைகளை மற்றொருவர் சுத்தம் செய்ய வைப்பது நாம் அவருக்கு கொடுக்கும் மிக கொடுமையான தண்டனை. அந்த தண்டனையை இனி மற்றவருக்குக் கொடுக்காமல் குப்பைகளை அதற்கான குப்பைத் தொட்டியில் போட்டு "பொது இடத்தை அசுத்தப்படுத்த கூடாது" என்ற எண்ணமும் மனதைக் குட்டியது. உடனே கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட் கவரைக் குப்பை தொட்டியில் இட்டுவிட்டு மன நிம்மதியுடன் சென்றேன்..
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment