தந்தை தன் மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது,
மகள்: அப்பா நாம் எங்கே செல்கிறோம்..?
அப்பா: பள்ளிக் கூடத்திற்கு..
மகள்: பள்ளிக்கூடத்திற்கு எதற்காக செல்ல வேண்டும்..?
அப்பா: நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்வதற்காக....
மகள்: நல்ல பண்புகள் என்றால் எவை..?
அப்பா: சாதி மதம் இனம் பார்க்காமல் அனைவரிடமும் அன்பு செலுத்துவது. பிறகு நன்கு படித்து அறிவை வளர்த்துக் கொள்வது..
மகள்: அப்போ சாதி முக்கியம் இல்லையா..?
அப்பா:இல்லவே இல்ல மா..
மகள்: அப்புறம் ஏன் நேத்து பக்கத்துக்கு வீட்டு மாமாவிடம் என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு "சாதி சான்றிதழ்" கேட்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்கள்.
அப்பா: ...........??
இது தான் இன்றைய நிலைமை.. ""சாதிகள் இல்லையடி பாப்பா"" என்று கற்பிக்கப்படும் அதே பள்ளியில் தான் "சாதி சான்றிதழ்" அவசியம் என்ற கட்டாயமும் உள்ளது. பாரதியார் பாடிய பாடல்களும் பெரியார் தோற்றுவித்த அறிவு சிந்தனைகளும் வெறும் மதிப்பெண்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நடைமுறையில் பயன்படுத்த பல்வேறு வழிகளில் தடைகள் உள்ளன.. இந்த தடைகள் நீங்கா வரை "சாதிகள் இல்லையடி பாப்பா" "யாதும் ஊரே யாவரும் கேளிர்" "அறம் செய்ய விரும்பு" போன்ற பல்வேறு ஒற்றுமையை உண்டாக்கும் கருத்துகளை அறிவிப்பு பலகைகளிலும் ஆட்டோவிலும் மட்டுமே காண முடியும்.
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment