Skip to main content

Posts

Showing posts from March, 2015
வேலைக்காரியிடம்  வீட்டுப் பொறுப்புகளை ஒப்படைக்க பலமுறை யோசிக்கும் தாய்மார்கள் பெற்ற பிள்ளைகளை மட்டும் எளிதில் விட்டு விடுகின்றனர்.. கார்த்திக் பிரகாசம்..
           ஒருவனை முட்டளாக்குவதால் கிடைக்கும் ஓரிரு நிமிட மகிழ்ச்சி என்பது நிரந்தரமல்ல.. அதனால் பெற போவதும் ஒன்றும் இல்லை மாறாக இழப்பது ஒருவர் நம் மீது வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கை.           வாழ்கையில் இழந்த எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் மீண்டும் அடைந்து விடலாம். ஆனால் ஒருவர் நம் மீது வைத்திருந்த நம்பிக்கையை மட்டும் திரும்ப பெறவே இயலாது. இழந்தால் இழந்தது தான். .            மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிப்பவன் தான் முதல் முட்டாள் "முட்டாள் தினம்" கொண்டாடப்படுவது தான் மிகப் பெரிய "முட்டாள் தனம்"    கார்த்திக் பிரகாசம்..
மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிப்பவன் தான் "முதல் முட்டாள்" முட்டாள் தினம் கொண்டாடப்படுவது தான் மிகப் பெரிய "முட்டாள் தனம்"    கார்த்திக் பிரகாசம்..
உயிரைப் பிரித்த வலியைத் தினம்தினம் உரசிப் பார்க்கிறேன் உன் ஞாபகத் தீண்டல்களால்.. கார்த்திக் பிரகாசம்..
எவருக்கும் எக்காலத்திலும் காதல் மாறுவதே இல்லை.. முக்காலத்திலும் காதலிக்கபடுபவர்கள்  மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.. கார்த்திக்  பிரகாசம்..

நான் மலாலா ..

          ஸ்வாட் பள்ளத்தாக்கின் சரித்திர தேவதை.  "நான் மலாலா" புத்தகத்தை படித்து முடித்த தருணத்தில் மலாலாவின் நட்பைப் பெற்ற உணர்வு கிடைத்தது. இந்த சிறு வயதில் "பெண் கல்விக்காக" மலாலா கொடுத்த குரல் மிக உயர்வானது. இந்த வயதில் நான் என்னை சுற்றியுள்ள சமுகத்திற்கு என்ன செய்தேன் என்று நினைக்கும் போது தாழ்மையாய் இருக்கிறது. அதே நேரம் போராடுவதற்கு வயது ஒன்றும் அடிப்படை தகுதி இல்லை என்பதை மலாலாவின் இந்த புத்தகம் உணர்த்துகிறது..          தன் குழந்தை தன் வாழ்கையின் நோக்கமாக அல்லது லட்சியமாக ஒரு விடயத்தை தெரிவு செய்ய பெற்றோரின் பங்கு எந்த அளவுக்கு முக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கு மலாலாவின் பெற்றோர்கள் ஒரு உண்மையான உதாரணம்.. ஏனென்றால் இது மலாலாவின் தனிப்பட்ட நோக்கம்  மட்டுமல்ல.. அவரது தந்தையின் வாழ்நாள் கனவு.. தந்தையின் வாயிலாக மலாலாவிற்கு ஏற்பட்ட தாகம் தான் இது..             மலாலா பெண் கல்விக்காகவும், உரிமைக்காகவும் மட்டும் குரல் கொடுக்கவில்லை.. ...

வயதைத் தொலைத்தவள்..

வயதைத் தொலைத்த வண்ணத்துப் பூச்சியாக பெண் உருவில் காற்றில் பறந்து வருகிறாள்.. காட்டில் பூக்களைத் தேடும் வண்ணத்துப் பூச்சிகளை எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்.. காற்றில் பூக்கள் தேடும் வண்ணத்துப் பூச்சியை இன்று தான் காண்கிறேன்.. கார்த்திக் பிரகாசம்...

ஆபீஸ் அரசியல்..

மகா நடிகனையெல்லாம் மா மனிதனாக மதிப்பதும் ""மாங்கு மாங்கு"" என்று வேலை செய்பவனையெல்லாம் மட்டம் தட்டியே மடக்குவதும் ஆபீஸ்  விதிமுறைகளுக்குள் வரையறுக்கபடாத விதிகள்...!!! கார்த்திக் பிரகாசம்...
உடலில் இருக்கும் ஆயிரம் வியாதிகளை விட கொடியது மனதின் ஓரத்தில் ஒன்றியிருக்கும் "கௌரவம்" என்னும் ஒரு நோய்... கார்த்திக் பிரகாசம்...
சேலை கட்டிய கணம் கற்சிலைக் கூட காரிகை ஆகிறது.. கார்த்திக் பிரகாசம்..
காதல் அழிவதில்லை.. ஆதலால்  அளி(ழி)க்கபடுகின்றது.. கார்த்திக் பிரகாசம்...

உலக வன நாள்..

அழகிய வனங்களை அழித்து அடுக்குமாடி கட்டடங்களையும் உயிரைக் கவ்வும் புகையைக் கக்கும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியாயிற்று.. வனங்கள் இருந்த தடங்கள் தேய்ந்து தார்ச் சாலைகளுக்குள் புதைந்து மாண்டு கிடக்கின்றன.. இயற்கை காற்று இறந்து கொண்டிருக்கிறது செயற்கை காற்றும் செயலிழக்கும் காலம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. காடுகளை அழித்து கட்டடங்கள் ஆக்கிவிட்டு காற்றுக்காக காத்திருக்கிறோம்... கார்த்திக் பிரகாசம்...
காதல் செய்வது குற்றம் என்றால் மனதை அன்பிற்காகவும் அரவணைப்பிற்காகவும் ஏங்க வைத்த அந்த கடவுள் தான் முதல் குற்றவாளி..!! கார்த்திக் பிரகாசம்...
சிலரின் அறியாமை எப்பொழுதுமே மற்றவர்களால் விரும்ப படுகிறது.. கார்த்திக் பிரகாசம்...

தங்கையே தாயாய்..!!!

உனக்கு திருமணம் செய்து அனுப்பி வைக்கும் போது கூட ஏற்படாத பிரிவும் வலியும் இன்று உன்னை பிரிந்து உன் வீட்டில் இருந்து திரும்பும் போது மனதை ஒருசேர பிளக்கிறது.. ரயிலில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நிறைய பேர் எதிரிலும் ஜன்னலின் வழியும் என் விழிகளில் விழுந்து செல்கின்றனர். ஆனால் மனமெங்கும் அண்ணன் தங்கையாக நானும் நீயும் சண்டைக்காக சமாதானமும் சமாதானதிற்காக சண்டையும் இட்ட நினைவுகளும் எனக்காக நீ செய்த சிறுசிறு தியாகங்களும் என்னுள் உறைந்து கிடக்கும் கண்ணீர்த் துளிகளை உயிர்ப் பெற வைக்கின்றன.. நீ திருமணம் முடித்து போன போது வீடெங்கும் உன் நினைவுகள் நிரம்பி வழிந்தன. உன்னை பிரிந்து செல்லும் இத்தருணம் என் உயிரை உன்னுடனே விட்டு வெறும் உடலை மட்டும் கரையேற்றுவதைப் போல் உணர்கிறேன்.. ஒவ்வொரு பெண்ணும் தாய் என்பதை ஏற்கனவே அறிவேன்.. என் தங்கையும் எனக்கு தாய் தான் என்பதை இன்று தான் உணர்ந்தேன்.. கார்த்திக் பிரகாசம்...
பெண் அலங்காரத்தினால் அழகாவதில்லை.. ஆண் பார்க்கும் போது தான் அழகாகிறாள்...!!!! கார்த்திக் பிரகாசம்...
ஆண்டுக்கணக்காய் கண்ணாடியில் அடிக்கடி பார்த்து சலித்த முகம் தான்... ஏனோ அவளின் அசட்டு பார்வைக்கு பிறகு கொஞ்சம் அழகாய்ப் புதிதாய் தெரிகிறது... கார்த்திக் பிரகாசம்...
வழிய வந்து வலியைத் தந்து வலியின் வலிமையை வலியுறுத்திச் செல்கிறாள்.. காணாத நேரத்திலும் கண்ணுக்குள் வந்து கண் இமைக்க இயலாமல் களபரம் கணிகிறாள்.. என்னை காதலிக்காமல் எனக்குள் காதலை விதைக்க விழைகிறாள்.. காதலே செய்யாமல் காதலை உணர்த்தி உருக்குகிறாள்... கார்த்திக் பிரகாசம்..
அவளோடு இருக்க எத்தனையோ பேர் ஆசைப்பட்டுக்  கொண்டிருக்கின்றனர்..!!! நானோ அவளது நினைவுகளில் மட்டுமாவது இருக்க பேராசைக் கொண்டிருக்கிறேன்..!!! கார்த்திக் பிரகாசம்...

ஒரு தலைக் காதல்..

காலம் எனக்கு துரோகம் இழைத்துவிட்டது.. என் வாழ்க்கையில் உன்னை முன்கூட்டியே அறிமுகம் செய்யாமல்...!!! கார்த்திக் பிரகாசம்...
தாமதிக்கப்பட்ட நீதி  தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்குத்தான்   சாதகமாக இருக்கும்... கார்த்திக் பிரகாசம்..

""கண் மை""

அவள் விழி அழகை வரிகளால் அலங்கரிக்க அவளது கண் மையைக் கடனாய்க் கேட்கின்றன என் பேனாக்கள்.. ஆனால் அவளோ தன் கயல் வி(கு)ழிக்குள் நான் விழுந்து விட கூடாதென அதே கண் மையினால் வேலி அமைத்துவிட்டாள்... கார்த்திக் பிரகாசம்..

நான்..!!

உன் வெட்கத்தில் உறைகிறேன் நான்..! உன் அழுகையில் உருகுகிறேன் நான்..! உன் சிரிப்பினில் சிலிர்க்கிறேன் நான்..! உன் மூரலில் முடங்குகிறேன் நான்..! உன் பாசத்தைப்  பகிர்கிறேன் நான்..! உன் அன்பினில் அனைகிறேன் நான்..! உன் ஊடலில் உயிர் கலைகிறேன் நான்..! உன் கூடலில் மீண்டும் பிறக்கிறேன் நான்..! உன் தந்தையாக திகழ்கிறேன் நான்..! உன் தாய்மையை உணர்கிறேன் நான்..! உன் தாயைப் போல் தவிக்கிறேன் நான்..! கார்த்திக் பிரகாசம்...
உன்னைத் தேடித் திரிந்து கண்டுபிடிக்கவில்லை இருந்தாலும் உன் பிரிவை எளிதில் ஏற்க முடியவில்லை.. கார்த்திக் பிரகாசம்...