ஸ்வாட் பள்ளத்தாக்கின் சரித்திர தேவதை. "நான் மலாலா" புத்தகத்தை படித்து முடித்த தருணத்தில் மலாலாவின் நட்பைப் பெற்ற உணர்வு கிடைத்தது. இந்த சிறு வயதில் "பெண் கல்விக்காக" மலாலா கொடுத்த குரல் மிக உயர்வானது. இந்த வயதில் நான் என்னை சுற்றியுள்ள சமுகத்திற்கு என்ன செய்தேன் என்று நினைக்கும் போது தாழ்மையாய் இருக்கிறது. அதே நேரம் போராடுவதற்கு வயது ஒன்றும் அடிப்படை தகுதி இல்லை என்பதை மலாலாவின் இந்த புத்தகம் உணர்த்துகிறது..
தன் குழந்தை தன் வாழ்கையின் நோக்கமாக அல்லது லட்சியமாக ஒரு விடயத்தை தெரிவு செய்ய பெற்றோரின் பங்கு எந்த அளவுக்கு முக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கு மலாலாவின் பெற்றோர்கள் ஒரு உண்மையான உதாரணம்.. ஏனென்றால் இது மலாலாவின் தனிப்பட்ட நோக்கம் மட்டுமல்ல.. அவரது தந்தையின் வாழ்நாள் கனவு.. தந்தையின் வாயிலாக மலாலாவிற்கு ஏற்பட்ட தாகம் தான் இது..
மலாலா பெண் கல்விக்காகவும், உரிமைக்காகவும் மட்டும் குரல் கொடுக்கவில்லை.. தலிபான்களால் மக்களுக்கு ஏற்படும் இடர்களையும் அவர்கள் "இஸ்லாமை" தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு விதிமுறைகளை மாற்றி மக்களை பின்பற்ற தூண்டுவதை பற்றியும் பெருத்த குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதில் ஒரு வியப்பு என்னவென்றால் தாலிபானால் சுடப்பட்டு மறுபிறவி எடுத்த வந்த போதும் பயப்படாமல் தன் நோக்கத்தில் இருந்து பின் வாங்காமல் தொடர்ந்து தன் நாட்டு மக்களுக்காகவும், பெண்களின் கல்விக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார். "இளங்கன்று பயமறியாது" என்பதற்கு நிஜ உதாரணம் "மலாலா".
என்னை கவர்ந்த, எனக்குள் போராட்ட குணத்தை விதைத்த பெண் "மலாலா". நானும் என் சமுகத்திற்கு பயன்படும்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய "மலாலா" விற்கு நன்றி. இந்த எண்ணம் எனக்கு மட்டுமல்ல இந்த புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment