Skip to main content

Posts

Showing posts from October, 2015
விரும்பி வந்தவள் இல்லை ஒரு கயவனை நம்பியதால் விற்கப்பட்டவள்...!!! உன்னை என் மகள் போல்  கவனித்து கொள்வேன் என்றான் அன்று என் நன்றியை கண்ணீரால் அவனுக்கு காணிக்கையிட்டேன்...!!! ஆனால் இப்பொழுது தான் புரிகிறது அவன் சொன்ன மகளின் அர்த்தம் "விலைமகள்" ...!!! வந்தவர்களின் கால்களையெல்லாம் தொட்டு காப்பாற்ற கெஞ்சினேன்...!!! ஆனால் அவர்களுக்கு தன் மகளைப் போல் தன் மனைவியைப் போல் தன் சகோதரியைப் போல் தன் தாயைப் போல் நான் ஒரு பெண்ணாக தெரியவில்லை சுகம் தரும் பொருளாகத் தான் தெரிந்தேன்...!!! அவர்களுக்கு விந்தணு வெளிப்பட்ட பிறகு கிடைக்கும் சுகம் மட்டுமே தெரிந்ததே தவிர என் கண்களில் வெளிப்படும் கண்ணீருக்கான காயங்கள் தெரியவில்லை...!!! என்னை விற்ற கயவன் ஒரு ஆண்மகன்...!!! என்னை போன்ற அறியாப் பெண்களை அறிந்து இதை தொழிலாக செய்பவன் ஒரு ஆண்மகன்...!!! தினம்தினம் என்னை தேடி வந்து அலைபவன் ஒரு ஆண்மகன்...!!! ஆனால் இந்த சமுகம் எனக்கு மட்டும்  இட்ட பெயர் " விபச்சாரி "...!!! பெண்களின் உடல் விற்பனை பொருளல்ல ...!!! கார்த்திக் பிரகாசம்...
தீபாவளி வந்துவிட்டது.. **மகனுக்கு புது மொபைல் வாங்க வேண்டும் என்ற கவலை...!!! **மகளுக்கு வட இந்திய டிசைன் சுடிதார் வாங்க வேண்டும் என்ற கவலை...!!! **மனைவிக்கு எக்ஸ்சேஞ் ஆபரில் வேற வாஷிங் மிஷின் வாங்க வேண்டும் என்ற கவலை...!!! **அப்பாவிற்கு யார்கிட்ட கடன் வாங்குவது என்ற கவலை...!!! கார்த்திக் பிரகாசம்...  
கண்ட கனவெல்லாம் நினைவானது கடைசியாக கண்ட கனவில்...!!! கார்த்திக் பிரகாசம்...  
புத்தகம் பருகும் புத்துணர்ச்சியும் தே(ன்)நீர் தருகும் அனுபவங்களும் சொக்க வைக்கும் சுகங்களின் சொர்க்கம்... கார்த்திக் பிரகாசம்...
மணி பத்தானது...!!! மனமோ பைத்தியமானது...!!! தேர்வறையில் நான்...!!! கார்த்திக் பிரகாசம்...
"பிடிக்கும்" அதிகபட்சத்தின் குறைந்தபட்ச வெளிப்பாடு... "பிடிக்காது" குறைந்தபட்சத்தின் அதிகபட்ச வெளிப்பாடு... கார்த்திக் பிரகாசம்...
பார்க்கும் முன்னே பழகி விடுவது தாயின் முகத்தில்... பார்த்த உடனே பாழாகி விடுவது கண்ணியின் முகத்தில்... கார்த்திக் பிரகாசம்...

அக்டோபர் 15..

விஞ்ஞான அறிவால் உலகத்தையே வியக்க வைத்த இந்திய மாணவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த தினம்... கார்த்திக் பிரகாசம்...

நண்பனுக்கு...

மீசைக் கூட எட்டிப் பார்க்கா வயதிலேயே நட்பு தன் பிஞ்சு பாதங்களை நமக்குள் எட்டுவைக்க ஆரம்பித்துவிட்டது...!!! எதிர்பார்க்கவில்லை நம் நட்பின் பாதங்கள்  எதிர்காலத்தையும் எதிர்த்து நிற்குமென்று...!!! நமக்குள் ஏன் இந்த ஒற்றுமை...!!! இது சாத்தியமானது நம் நம்பிக்கையென்னும் நட்பினிலா அல்லது நட்பு என்ற நம்பிக்கையினிலா...!!! மொத்தத்தில் கருவுற்றிருந்த காலம் நம் நட்பை சுகப் பிரசவம் செய்துவிட்டது.. இனி அந்த நட்பென்னும் குழந்தையை நல்ல முறையில் வளர்த்து காலத்தைக் கர்வம் கொள்ள வைக்க வேண்டியது நம் கடமை...!!! கார்த்திக் பிரகாசம்...
எழுதவோ படிக்கவோ தெரியாத தாயைப் பற்றி மகன் தன் நன்றியுரையில் முதல் வாக்கியமாக எழுதுகிறான்.. "" என் முதல் ஆசிரியைக்கு "" சமர்ப்பணம்... கார்த்திக் பிரகாசம்...
விடையில்லா விடயத்திற்கு ஆயிரக்கணக்கான கேள்விகள்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஆங்கிலத்தில் படித்த ஒரு அழகிய கதை.. தமிழில், குழந்தைகளுக்கான பள்ளியொன்றில் குழந்தைகளுக்கு ஒரு சிறிய  போட்டி நடத்த ஆசிரியர்களால் திட்டமிடப்பட்டது..  போட்டியின் தலைப்பாக "அப்பா எனக்காக செய்ததில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்" என்று அறிவிக்கப்பட்டது.. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு பிடித்த, தன்னை கவர்ந்த தந்தையின் விஷயங்களை தங்களுக்கே உண்டான மழலை மனத்தில் எழுதி இருந்தனர்.. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருந்ததால் ஆசிரியர்களிடையே பயங்கர குழப்பம் ஏற்பட்டது.. கடைசியாக, ஒரு குழந்தை எழுதி இருந்த பதில் அனைவருக்கும் ஆனந்தத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியது.. பிறகு அனைத்து ஆசிரியர்களும் ஒரு மனதாக அந்த குழந்தைக்கு பரிசளிக்க முடிவு செய்தனர்.. அந்த குழந்தை எழுதி இருந்தது. "என் அப்பா எனக்காக செய்ததிலேயே நான் மிக பாக்கியமாக கருதும் விஷயம் அவர் என் அம்மாவை திருமணம் செய்து கொண்டது தான்"..
தினம் தினம் விடியல்... இரவுக்கு மட்டும் தானோ..? கார்த்திக் பிரகாசம்...
முன்னொரு நாளில் பிரியமானவர்களின் பிறந்த நாட்கள் மூளையின் ஏதாவது ஒரு மூலையில் ஞாபகம் வைக்கப்பட்டன...!!! இன்றைய நாட்களில் முகநூலின் முன்னெச்சரிக்கையால் ஞாபகப் படுத்தபடுகின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...
"அவன்" ஆக இருந்த ஓர் உறவு "அவர்"ஆக மாறும் போது "அவர்" ஆக இருந்த பல உறவுகள் நொடி பொழுதில் "அவன்" ஆகி ஆவியாகின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...
அரசனோ ஆண்டியோ எவனாயினும் அரியாசனம் அமர அறியா சனங்களின் ஆள்காட்டி விரல்கள் அணி திரள வேண்டும்...!!! கார்த்திக் பிரகாசம்...

தண்ணீர் தேசம்..

வைரமுத்துவின் மற்றுமொரு குறிப்பிட தகுந்த படைப்புகளில் ஒன்று.. தமிழ் ரோஜா மற்றும் கலைவண்ணன் அவர்களின் காதலைப் பேசும் கடல் தேசம்.. ஆரம்பத்தில் காதலின் மீது ஆசையைக் காட்டி அடுத்து   கடலின் மீது அச்சத்தை ஏற்படுத்தி பிறகு காதலின் மீது நம்பிக்கை உண்டாக்கி கடைசியில் கடலின் கருணையைக் காட்டி முடிகிறது... அதே நேரத்தில், உயிரை பணயம் வைத்து கடலில் சென்று மீன் பிடிப்பவர்களின் வாழ்க்கையையும் பழத்தில் ஊசியை ஏற்றுவதை போல  மனதில் ஏற்றிச் செல்கின்றன வைரனின் வரிகள்.. பயம் உயிரைக் குடிக்கும்.. நம்பிக்கை வாழ்வை மீட்கும்.. கார்த்திக் பிரகாசம்...