Skip to main content

பயணம்

பயணத்தைப் பற்றி எழுதும் போது தன்னிச்சையான மகிழ்ச்சி. ஏனெனில் கண்டைந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது மட்டும் அதன் நோக்கமல்ல. படிப்பவர்களை நம்மோடு அழைத்துச் சென்று நாம் உணர்ந்து அனுபவித்த இன்பங்களை அவர்களையும் அனுபவிக்க வைப்பது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கேற்ப அவர்களையும் அந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளத் தூண்டும் ஒரு முயற்சி. எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வபோது அந்த பயணத்தை எழுத்துக்களின் வழி நாமே மற்றொரு முறை அசைப்போட்டு பார்த்திட ஒரு வாய்ப்பு.

இயற்கையைத் தேடிச் செல்லும் அனைத்து பயணமமுமே இனிமையானது தான். காரணம் சமரசமில்லா இயற்கையின் அழகு ஒருபோதும் கண்களுக்கு தொய்வை தருவதில்லை. அதனழகை அள்ளி அள்ளி அருந்தலாம்.
கடந்த வார தொடர் விடுமுறை அப்படியொரு இனிமையான பயணத்தை அலுவலக நண்பர்களுடன் ஏற்படுத்தி தந்து உதவியது.

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் சன்னமான வெயிலுடன் சனிக்கிழமை பொழுது புலர்ந்தது.மழையின் கொடையினால் காணாமல் போயிருந்த அருவிகள் ஆங்காங்கே தங்கள் அடையாளத்தை மீண்டும் புதுப்பித்திருந்தன. மரங்களும் பூக்களும் இலைகளும் முலாம் போட்டு பூசியது போல் பொலிவுற குலுங்கின. தவிழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள் மலைகளை ஒளித்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தன. மரமும் மாநகரமும் உச்சியில் ஒய்யாரமாகக் காட்சியளித்தன.இரவு தன் குளிராடையை எடுத்து உடுத்தத் தொடங்கியிருந்த நேரம் படகுச் சவாரியின் பரவசத்தோடு ஏற்காடு எங்களை வழியனுப்பியது.

அடுத்த நாள் கொல்லிமலையில். ஆயிரத்து நானூறு மீட்டர் உயரத்தில் தன்பெரும் பேரழகை மறந்தும் மறைத்தும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது கொல்லிமலை. இயற்கையின் பாதை இலகுவானதாக இருப்பதில்லை மொத்தம் எழுபது கொண்டை ஊசி வளைவுகள். ஆனால் உச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் ஆகாய கங்கை அருவி, மலையேறி வந்த களைப்பையும், மனதில் அண்டிக் கிடக்கும் கவலை, சோகம், வலி என அத்தனையையும் கழுவி மனதைச் சுத்தம் செய்துவிடுகின்றது. உச்சிக்குச் சென்று கிட்டத்தட்ட ஆயிரம் படிக்கட்டுகள் கீழே இறங்கினால் காத்திருக்கும் அபாய பேரழகு.

யோசித்து பார்த்தால் அருவியும் மழையும் ஒன்றாக கைக்கோர்த்து கொட்டியது போன்றதொரு மாயை. மீண்டும் ஆயிரம் படிக்கட்டுகள் மேலே ஏறவேண்டும் என்றென்னும் போது அருவியிலேயே தங்கிவிட துடிக்கும் மனம்.

இரவை நடுக்கி வேதனைப்படுத்தாமல் அழகாக தழுவிக் கொண்டது குளிர். அருவி தந்த இதமும், தழுவிச் சென்ற குளிரும் உறக்கத்தை ஒவ்வொருச் சொட்டாக அனுபவிக்க வைத்தது.

இயற்கையைத் தேடிச் சென்ற பயணத்தில், இரண்டு நாட்கள் இரண்டு மலைகளின் உச்சியில். அது தந்த மகிழ்ச்சியும், அணைப்பும் ஏராளம். 

கண்களை மூடினாலும் காட்சிகள் விரியும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...